நயன்தாரா குறித்து எழுந்த கமெண்ட்க்கு கண்டனம் தெரிவித்த சின்மயி!

நயன்தாரா குறித்து எழுந்த கமெண்ட்க்கு கண்டனம் தெரிவித்த சின்மயி!

மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். இவர் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் கனெக்ட். விக்னேஷ் சிவனுடனான திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா அடுதடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் 2015-ஆம் ஆண்டு தன் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் ஹாரரான ’மாயா’ படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் உடன் மீண்டும் கைக்கோர்த்து கனெக்ட் என்ற படத்தில் நயன்தாரா நடித்தார்.

சமீபத்தில் நடிகை நயன்தாரா கனெக்ட் படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டார். திருமணத்திற்கு பிறகு நயன்தாரா வாடகைதாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றது சர்ச்சை ஆனது. அதற்கு பிறகு முதல் முறையாக நயன்தாரா வெளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. அந்த நிகழ்ச்சியின் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது.

அந்த வீடியோக்களுக்கு கீழ் பலரும் நயன்தாராவை பற்றி மிகவும் ஆபாசமாக கமெண்ட் செய்து இருக்கிறார்களள். இதற்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இப்படிப்பட்டவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என அவர் கோபத்துடன் சொல்லி இருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *