வரிசையாக டாப் ஹீரோக்களை இயக்க போகும் H வினோத்!

வரிசையாக டாப் ஹீரோக்களை இயக்க போகும் H வினோத்!

விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. மாஸ்டர் படத்தை இணை தயாரிப்பு செய்திருந்த லலித் குமார் தான், தளபதி 67 படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வாரிசு படம் வெளிவந்த பின் வெளியாகும் .

இதுக்கிடையிலே தளபதி 67 தயாரிப்பாளரான லலித் குமார் தயாரிப்பில் மற்றொரு புதிய படம் ஒன்று உருவாக இருக்கிறது. இப்படத்தை எச். வினோத் இயக்குவார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்போது, அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கும் வினோத், அது முடிந்ததும், கமல்ஹாசன் உடன் இணைவார் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன் -ஹெச்.வினோத் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை இன்னும் வெளியாகவில்லை, கூடிய விரைவில் அது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோக விஜய் சேதுபதி- யோகிபாபுவை வைத்து வினோத் ஒரு படத்தை இயக்க போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகிறது.

ஆனால், எந்த படம் குறித்தும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால் இந்த அனைத்து படங்களும் உருவாக இருப்பது உறுதியான தகவல்கள் தான் என்று கூறப்படுகிறது. துணிவு முடித்த பின்னர் உடனடியாக வினோத், யோகிபாபு- விஜய் சேதுபதி படத்தை இயக்குவார், அதற்கு அடுத்து கமல்ஹாசன் படத்தில் இணைவார். இது முடித்த பின்னர் தான் தனுஷ் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *