பீஸ்ட் சாதனையை முறியடிக்க முயற்சிக்கும் வாரிசு!!!

பீஸ்ட் சாதனையை முறியடிக்க முயற்சிக்கும் வாரிசு!!!

விஜய் நடிப்பில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளிவரவிருக்கும் படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருக்கிறார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த ரஞ்சிதமே, தீ தளபதி இரு பாடல்களும் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் இசை வெளியிட்டு விழா இந்த மாதத்தின் இறுதிக்குள் நடைபெறும் என கூறப்படுகிறது. அதே போல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வாரிசு படத்தின் ட்ரைலர் ஜனவரி 1 புத்தாண்டு அன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் நள்ளிரவு 1 மணி காட்சி, அதிகாலை 4 மணி காட்சி, காலை 8 மணி காட்சி என இந்த மூன்று சிறப்பு காட்சிகளுக்கும் ரூ. 500 டிக்கெட் விலை நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூலை இந்த படம் முறியடிக்கும் என்று படக்குழு எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *