சம்பளம் வாங்காத சிம்பு!

சம்பளம் வாங்காத சிம்பு!

நடிகர் சிலம்பரசன் பன்முகத்திறமை கொண்ட திரை பிரபலம் என்று அனைவரும் அறிந்த விஷயம். இவர் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வர இருந்தாலும் அவ்வப்போது மற்ற நடிகர்கள் படங்களிலும் பாடல்களை பாடி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்திற்காக தீ தளபதி பாடலை பாடி இருந்தார் சிம்பு. தமன் இசையமைப்பில் அவர் பாடிய இப்பாடல் தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக போய் கொண்டு இருக்கிறது. இப்பாடலின் கூடுதல் சிறப்பு என்றால் சிம்பு பாடலில் நடனம் ஆடி இருப்பது தான். பாடியதோடு மட்டுமின்றி இப்பாடலுக்காக எடுக்கப்பட்ட புரோமோ வீடியோவில் சிம்பு வெறித்தனமாக நடனமாடி அசத்தி இருந்தார். நடிகர் விஜய் திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக இப்பாடலை உருவாக்கி வெளியிட்டு இருந்தார்கள்.

இந்நிலையில், தீ தளபதி பாடலை பாடவும், அதில் நடனமாடவும் நடிகர் சிம்பு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்கிற ஆச்சர்ய தகவல் வெளியாகி இருக்கிறது. தமன் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பதாலும், விஜய் மீது வைத்திருக்கும் நன்மதிப்பின் காரணமாகவும், சிம்பு சம்பளமே வாங்காமல் இப்பாடலை பாடிக்கொடுத்து இருக்கிறார்.

May be an image of 6 people and people standing

தீ தளபதி பாடலை ஒன்றரை மணிநேரத்தில் ரெக்கார்ட் செய்துவிட்டார்களாம். அதேபோல் அந்த புரோமோ வீடியோவையும் 6 மணிநேரத்தில் படமாக்கிவிட்டார்கள். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும்போதும் சக நடிகரின் படத்துக்காக சிம்பு சம்பளமே வாங்காமல் பணியாற்றியதை அறிந்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *