’தாராவி’ தொடரின் வெற்றிக்கு நடிகர்கள் தேர்வும் ஒரு முக்கியக் காரணம்!” – சமித் கக்கட்

’தாராவி’ தொடரின் வெற்றிக்கு நடிகர்கள் தேர்வும் ஒரு முக்கியக் காரணம்!” – சமித் கக்கட்

கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டும் வகையில் நடிகர்களின் வலுவான நடிப்பு ஒரு படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடலாம். அந்த வகையில், எம்.எக்ஸ் ஒரிஜினல் கதையான ’தாராவி பேங்க்’ இணையத்தொடரை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வது அதிலுள்ள நடிகர்களின் நடிப்புதான்.

மொத்தம் 10 எபிசோட்களைக் கொண்ட இந்த இணையத் தொடர், அமைதியற்ற காவல்துறை அதிகாரியான விவேக் ஆனந்த் ஓபராய் மற்றும் தமிழனாக டான் தலைவன் கதாபாத்திரத்தில் சுனில் ஷெட்டியும் நடித்துள்ளனர். டானாக இருந்தாலும் தலைவனின் இன்னொரு பக்கமான அவனது குடும்பத்தின் மீதான அன்பும் இதில் காட்டப்பட்டுள்ளது. தலைவனின் குடும்பமாக சாந்தி பிரியா, பாவனா ராவ் மற்றும் வம்சி கிருஷ்ணா ஆகியோர் தங்களது சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளனர். இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலேயே தென்னிந்தியாவில் இருந்து சிறந்த நடிகர்களைக் கதைக்காகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்தியாவில் வளர்ந்து வரும் ஓடிடி உள்ளடக்கத்திற்கு ஏற்றது போல ஏராளமான திறமைகள் மற்றும் புதிய கதைகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது. ’தாராவி பேங்க்’ இணையத் தொடர் மூலமாக ஓடிடியில் அறிமுகமாகி இருக்கும் சுனில் ஷெட்டி இதில் தலைவன் கதாபாத்திரத்தில் தன்னுடைய அசாத்தியமான திறமையாலும், நடிப்பாலும் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார். சாந்தி பிரியாஉம் தலைவனது தங்கையாகவும், தலைவனது மகளாக பாவனா ராவும் டிஜிட்டலில் அறிமுகமாகி இருக்கிறார். மேலும், தலைவனது மூத்த மகனாக வம்சி கிருஷ்ணா நடித்துள்ளார்.

நடிகர்கள் தேர்வு குறித்து இயக்குநர் சமித் கக்கட் பேசும்போது, “இந்தத் தொடரை உருவாக்கும்போது ஒவ்வொரு விஷயமும் உண்மைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று இந்தக் கதை கோரியது. அந்த வகையில், ‘தாராவி பேங்க்’ தொடரின் வெற்றிக்குக் காரணமாக நடிகர்களின் தேர்வும் முக்கியம் எனக் கருதுகிறேன். அன்னா, ஹெய்ல் என தெற்கில் இருந்து கிடைத்த நடிகர்கள் எல்லாருமே தங்களது கதாபாத்திரங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள். இவர்கள் தங்களது திறமையான நடிப்பை மட்டும் வெளிப்படுத்தாமல் சரியான வசன உச்சரிப்பு, மொழி, கலாச்சாரம் என தெற்கின் அத்தனை விஷயங்களையும் சரியாக வெளிப்படுத்தினார்கள். இதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்”.

சாந்தி பிரியா பேசுகையில், “பல வருடங்களாக நான் இந்தியாவின் தெற்குப் பகுதியில் வாழ்ந்தவள் என்பதால் அதன் பெருமையான கலாச்சாரம் என்ன என்பது எனக்குத் தெரியும். அதை நான் திரையில் பிரதிபலிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். நாங்கள் நால்வரும் ஒரே எண்ணத்தில் இந்தத் தொடரில் இணைந்து அதை செய்திருக்கிறோம். நீங்கள் அதை திரையில் பார்ப்பீர்கள். நாங்கள் உண்மையிலேயே ஒரு குடும்பமாகிவிட்டோம்”.

பாவனா ராவ், “’தாராவி பேங்க்’ தொடரின் ஒவ்வொரு ஷெட்யூல் முடியும்போது அடுத்து எப்போது தொடங்கும் என ஆவலாக காத்திருப்பேன். மொத்தப் படக்குழுவின் எனர்ஜியும் எனக்கும் உற்சாகம் கொடுக்கும். இது திரையிலும் எங்களுக்குள் சூப்பர் கெமிஸ்ட்ரியைக் கொடுத்திருக்கிறது”.

”கதாபாத்திரங்களுக்குள்ளான கெமிஸ்ட்ரி, அவர்களுடைய போராட்டங்கள், திட்டங்கள் போன்றவற்றைத் திரையில் எந்தவிதமான சிரமமும் செயற்கைத் தன்மையும் இன்றி சமித் கக்கட் காட்ட விரும்பினார். அதனாலேயே, எங்களைத் தேர்ந்தெடுத்து அதை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். இந்த வாய்ப்பு கொடுத்ததற்காக படக்குழு அனைவருக்கும் நன்றி” என வம்சி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தத் தொடரில் சோனாலி குல்கர்னி, லூக் கென்னி, ஃபெர்டி தர்வாலா, சந்தோஷ் ஜூவேகர், நாகேஷ் போஸ்லே, சித்தார்த் மேனன், ஹிதேஷ் போஜ்ராஜ், சமிஷா பட்நாகர், ரோஹித் பதக், ஜெய்வந்த் வாட்கர், சின்மயி மன்ட்லேகர், ஷ்ருதி ஸ்ரீவத்சா, சந்தியா ஷெட்டி மற்றும் பவித்ரா சர்கார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *