தமிழ்நாட்டில் அவதார் 2 வெளியாவது சந்தேகம்!

தமிழ்நாட்டில் அவதார் 2 வெளியாவது சந்தேகம்!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் Avatar. இந்த படம் யாரும் எதிர்பார்க்காத அளவு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இப்படம் 3 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. இப்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் Avatar: The Way of Water படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருகிறது.

இது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 160 மொழிகளில் வெளியாக போகிறது. வருகின்ற டிசம்பர் 16 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. அவதார் 2 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்துக்காக ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் சமயத்தில ஒரு பேரதிர்ச்சி வந்துள்ளது.

முதலாவதாக கேரளாவில் அவதார் 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே இருக்கும் வியாபார சிக்கலால் அவதார் 2 கேரளாவில் வெளியாவதில் சிக்கல் என்று கூறப்பட்டது. தற்போது தமிழ்நாட்டிலும் அவதார் படத்திற்கு பிரச்சனை கிளம்பி இருக்கிறது. அவதார் 2 படத்தை தமிழில் டப்பிங் செய்யும் விநியோக நிறுவனம், தியேட்டர் உரிமையாளர்களிடம் அதிக பங்கு தொகை கேட்பதாகவும், அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பதாகவும், இதனால் படம் வெளியாவதில் சிக்கல் உருவாகி இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இப்போது தமிழ் மொழியில் இப்படத்தை வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படம் வெளியாக கிட்டத்தட்ட 13 நாட்களே உள்ள நிலையில், இந்த சிக்கல் எழுந்துள்ளது. டிசம்பர் 16-க்குள் சுமுக பேச்சு வார்த்தை நடைபெற்றால் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் அவதார் 2 படம் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *