வரலாறு முக்கியம் அடுத்த சிவா மனசுல சக்தியா?

வரலாறு முக்கியம் அடுத்த சிவா மனசுல சக்தியா?

‘காஃபி வித் காதல்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகப் போகும் படம் ‘வரலாறு முக்கியம்’. சூப்பர் குட் ஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து இருக்கும் இப்படத்தை சந்தோஷ் ராஜன் இயக்கி இருக்கிறார். மலையாள படங்களுக்கு இசையமைத்த ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். படத்தில், கே.எஸ்.ரவிக்குமார், காஷ்மீர் பர்தேஷி, பிரக்யா நாகரா, விஜி ரத்தீஷ், விடிவி கணேஷ், சித்திக், ஷாரா, ராமதாஸ், லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை உள்ளிட்டோரும் நடித்து இருக்கிறார்கள். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் சூழலில் இப்படத்தின் பத்திரைகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

நடிகர் ஜீவா கூறியதாவது..,

” SMS படத்திற்கு பிறகு அது போன்று ஒரு படம் வேண்டும் என்று அனைவரும் கேட்டார்கள். அப்படி ஒரு படமாய் தான் இந்த வரலாறு முக்கியம் வந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் மிகவும் அதிகமான காமெடி உணர்வு உள்ளவர். அது படத்திலும் பிரதிபலித்துள்ளது. கோவிட் காலகட்டத்தில் இந்த படத்தை உருவாக்கினோம். ஹீரோயின் உடன் பணியாற்றியது மகிழ்ச்சியை தருகிறது. அவருடன் திரை பகிர்ந்துகொண்டதும், படபிடிப்பு தளத்திலும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அனைவரது கூட்டு முயற்சியிலும் இந்த படம் உருவாகி உள்ளது.

நடிகை பிரக்யா நாக்ரா கூறியதாவது..,

” இது என்னுடைய முதல் படம். அதற்கு இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துகள். இது எனது கனவு நிஜமான தருணம். ஜீவா போன்ற சிறந்த நடிகருடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. முதல் படத்திலயே மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய விஷயம். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு திரைப்படம். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை.

நடிகர் டி எஸ் கே கூறியதாவது..,

” சூப்பர் குட் பிலிம்ஸ்-ல் நான் நடித்தது எனக்கு பெருமையான விஷயம். இயக்குனர் போன்ற ஒரு கூலான மனிதரை பார்க்க முடியாது, மொத்த குழுவையும், நடிகர்களையும் சரியாக வழிநடத்தி படத்தை உருவாக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்.”

நடிகர் ஷாரா கூறியதாவது..,

” இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஜீவா சார், சூப்பர் குட் பிலிம்ஸ், இயக்குனர் சந்தோஷ் மூவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் சக்தி, காமெடி சீனை கொரியோகிராப் செய்வார், அது பலரிடத்தில் இருப்பது இல்லை. SMS போன்று இதுவும் ஒரு ஜாலியானா படமாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *