நிஜ வேட்டையன், சந்திரமுகி யார்?

நிஜ வேட்டையன், சந்திரமுகி யார்?

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை சந்தித்த படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கி இருந்த இப்படத்தில் கங்கா கதாபாத்திரத்தில் ஜோதிகாவும், அவருடன் பிரபு, நாசர், வடிவேலு, நயன்தாரா, வினீத், மாளவிகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருட்ந இப்படம் அந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து இருந்தது.

தற்போது 17 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றனர். இப்படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க மறுத்துவிட்டதால், அவருக்கு பதில் லாரன்ஸ் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, ராதிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சந்திரமுகியாக யார் நடிப்பது என்ற தகவல் வெளியாகி உள்ளது. சந்திரமுகி முதல் பாகத்தில், நிக சந்திரமுகி கதாபாத்திரத்திலும், நிஜ வேட்டையன் கதாபாத்திரத்திலும் நடிகர்கள் யாரும் தோன்றவில்லை. அவர்களுடைய ஓவியங்கள் மட்டுமே அங்கு இருக்கும். அவர்களுடைய ஆவி புகுந்தார் போல் தான் கதை அமைக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் பிளாஸ்பேக் காட்சியில் சந்திரமுகி, வேட்டையன் என்ற இரண்டு கதாபாத்திரத்தின் காட்சிகள் வருவதாக கூறப்பட்டது. அதில் நிஜ வேட்டையனாக லாரன்ஸ் நடிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

படத்தில் லட்சுமி மேனன்., கங்கனா ரனாவத் உட்ப இன்னும் சில முக்கிய நாயகிகள் நடிக்கும் நிலையில், சந்திரமுகியாக யார் நடிப்பார் என்ற ஆர்வம் எல்லோரிடமும் இருந்தது. இந்நிலையில், தற்போது அது யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தான் இப்படத்தில் சந்திரமுகியாக நடிக்க இருக்கிறார். சந்திரமுகி கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என விருப்பப்பட்டு கங்கனா கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பி வாசு இயக்கத்தில், ராஜசேகர் ஒளிப்பதிவில், எம் எம் கீரவாணி இசையில் சந்திரமுகி 2 உருவாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *