அவதார் 2 வெளியாவதில் சிக்கல்!!

அவதார் 2 வெளியாவதில் சிக்கல்!!

உலக பிரசிதி பெற்ற திரைப்படமான ‘அவதார்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் புதிய ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் 3டி-யில் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரம்மாண்டமாகத் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், கேரள திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் (FEUOK), ‘அவதார் 2’ படத்தை திரையிடப் போவதில்லை என முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அவதார் 2 விநியோகஸ்தர்கள் கேரளாவில் வெளியான முதல் வாரத்தில் 60% வருவாயைக் கேட்பதாக கூறபடுகிறது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் வழக்கமாக 55% தான் கொடுத்துவருவதாகவும், அதை தான் இந்த முறையும் கொடுப்போம், அதைத் தாண்டி கொடுத்தால் எங்களுக்கு நஷ்டம் வரும் என்று கூறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இப்போதைக்கு (FEUOK) அமைப்பு, ‘அவதார் 2’ திரைப்படம் தங்கள் அமைப்பின் கீழ் உள்ள 400 திரையரங்குகளில் திரையிடப்படாது என்று தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், இந்தச் சிக்கல் தொடர்பாக கேரள திரையரங்க உரிமையாளர்களின் கூட்டமைப்பு, ஹாலிவுட் திரைப்பட விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தையை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

May be an image of 6 people and text

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது அந்த மாநில ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *