அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதாக பிரபல நடிகர், இயக்குனர் மீது வழக்கு
பிரபல நடிகர் விஜய் தேவர்கொண்டா, திரைப்பட இயக்குனர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கவுர் ஆகியோர், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (ஃபெமா) மீறியதாக கூறப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக மேற்கண்ட நபர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பக்கா ஜட்சன் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கு தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகத்தில்விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அந்நியச் செலாவணி மோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில், சார்மி கவுர் மற்றும் பூரி ஜெகன்னாத் இணைந்து தயாரித்து, பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் வெளியான படம் லைகர். பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் உருவான இந்த படம், எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் இந்த விஷயம் அரங்கேறி இருக்கிறது என்று கூறப்படுகிறது.