தயாராகிறது ஜெய்பீம் 2!

தயாராகிறது ஜெய்பீம் 2!

கடந்த 2021ஆம் ஆண்டு TJ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தில் பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வக்கீல் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். டி.ஜே.ஞானவேல் இயக்கிய இப்படத்தில் மணிகண்டன், லிஜோ மோல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிறந்த கதைகளத்தில், சமூக பொறுப்புடன் அமைத்திருந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

படம் நேரடியாக OTT இல் வெளியானாலும், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஜெய் பீம் கூட்டணி மீண்டும் இணையப் போவதாக ஏற்கனவே ஒரு செய்தி வெளியானது. இந்நிலையில் இதனை உறுதி செய்யும் வகையில் ஜெய்பீம் 2 படம் உருவாகி வருவதாக 2டி தயாரிப்பு நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜெய் பீம் 2 உருவாகும் என்பது உறுதியாகியுள்ளது. காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *