ஜல்லிக்கட்டு தமிழன் அடையாளமா அல்லது சாதிய அடையாளமா….புயலை கிளப்பும் பேட்டைகாளி வலைதொடர்
Grossroot company இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் ஆஹா Ott தளத்தில் வெளியாகி உள்ள பேட்டகாளி என்ன சொல்ல வருகிறது பார்க்கலாம்.
தூங்கும் எரிமலையின் பெருவெடிப்பு என்கிற முதல் தலைப்பிட்டு ஆரம்பிக்கிறது கதைகளம்.. முத்தையா அதாங்க கிஷோர் அவர் கூட்டாளிகள் சேர்ந்து காரில் வரும் பண்ணையாரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்..அதில் டிரைவர் மாயாண்டி எசமான விசுவாசத்தில் சண்டையிட்டு பலியாகிரார்.. போலீஸ் வருவதை கண்ட கிஷோர் தப்பி ஓடும் போது அவர் மூலம் கதை சொல்ல சொல்ல நம் கண் முன்னே விரிகிறது கதைக்களம்.
சிவகங்கை சீமையில் பாண்டிய மன்னர் காலம் தொட்டு பண்ணையார்கள் பண்ணையில் வேலை செய்யும் கூலி ஆட்கள் என்று எழு நாடுகள் அதில் முல்லையூர் மக்கள் தாமரைக்குளம் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார்கள்..ஒரு கட்டத்தில் பண்ணையாரி்டம் கொஞ்சம் நிலம் கொடுங்கள் நாங்களும் பிழைத்து கொள்கிறோம் என்று கேட்க பிரச்சினை ஆரம்பிக்கிறது… வம்சாவழி வந்த செல்வசேகர பண்ணையார் கதா பாத்திரமாக வரும் வேல ராமமூர்த்தி தனக்கு பெயரும் புகழும் வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடிய வில்லத்தனம் அல்ல பண்ணையார் என்கிற ஆணவம் கொண்டவர்.
முல்லையூர் மக்கள் ஜல்லிக்கட்டில் தாமரைக்குளம் மாடுகளை பிடிக்க கூடாது என்று தண்டோரா போடும் அளவுக்கு பகை வளர்ந்து நிற்கிறது.இதை உடைக்க முல்லையூரிலிருந்து கிளம்பும் மாடுபிடி வீரன் பாண்டி என்கிற கலையரசன்..இவர் தாய்மாமா கிஷோர்..இவர்கள் பேச்சை கேட்காமல் ஜல்லிக்கட்டில் பண்ணையாரின் மாட்டை அடக்கி விடுகிறார்..இதனால் ஆத்திரம் கொண்ட பண்ணையார் மகனை கொம்பு சீவி விடுகிறார்.முரட்டு காளைகளுக்கு மத்தியில் அழகான காதலையும் கவிதையாய் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
உடலெங்கும் ஜல்லிக்கட்டில் மாடு குத்தி கிழித்த காயங்களோடு வாடிவாசல் வீரனாக கலையரசன் அசத்தி உள்ளார்… பண்ணையாராக வரும் வேல ராமமூர்த்தி மிரட்டி உள்ளார்.. முத்தையா வாக கிஷோர் நம்மையும் கதைக்குள் அழைத்து சென்று விடுகிறார்.
ஒளிப்பதிவு வேல்ராஜ் அவருக்கு hatsoff .. ஜல்லிக்கட்டு நிகழ்வில் கதையின் பாத்திரங்களை புகுத்தி காட்சி படுத்திய விதம் அற்புதம்.
ஆஹா வலைதொடராக வெளிவந்துள்ள பேட்ட காளி மறைக்கப்பட்ட சமூக சாதிய வன்மம் ஜல்லிக்கட்டில் இருக்கு என்று சொல்ல வந்துள்ளார் இயக்குநர் ராஜ்குமார்.