ஹெச்.வினோத், கமல்ஹாசன் இணையும் படத்தில் விஜய் சேதுபதி!!
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றி திரைப்படமான ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு, உலகநாயகன் கமல்ஹாசன் தனது அடுத்தடுத்த பட வரிசைகளை வலுப்படுத்தி வருகிறார். அவர் அடுத்ததாக இயக்குனர் ஹெச்.வினோத்துடன் கைகோர்ப்பதாகக் கூறப்படுகிறது.
கடைசியாக வெளியான ‘விக்ரம்’ படத்தில், பல வில்லன்கள் இருந்தாலும், அதில் விஜய்சேதுபதி ஒரு தனிமுத்திரை பதித்தார். பன்முக திறமையான விஜய் சேதுபதிபதிக்கு மீண்டும் கமல்ஹாசனுடன் பணிபுரிய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்தப் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் என்பது ஆச்சர்யமான தகவல்.
அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாக இயக்குனர் ஹெச் வினோத் இருப்பதால், அவர் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், அடுத்த படம் பற்றி கூறாமல் இருந்து வந்தார். துணிவு படத்திற்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் உடன் அவர் இணைவார் என்று கூறப்பட்டது. துணிவு படம் வெளியான பிறகு, கமல்ஹாசன் -ஹெச்.வினோத் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது
. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘KH233’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அரசியல் படம் என்றும் கூறப்படுகிறது. கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை முடித்தவுடன், ‘KH233’ படத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு தான் கமல்ஹாசன்- மணிரத்னம் இணையும் ‘KH234’ படம் ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது.