டிசம்பர் 2 அன்று வதந்தி வெப் சீரிஸ் அமேசானில் வெளியாகும்

டிசம்பர் 2 அன்று வதந்தி  வெப் சீரிஸ் அமேசானில் வெளியாகும்

பிரைம் வீடியோவின் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ் க்ரைம் த்ரில்லர் திரைப்படமான, வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி, டிசம்பர் 2 அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது

வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் புஷ்கர் மற்றும் காயத்ரி , ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கிய இந்த அமேசான் ஒரிஜினல் தொடர் ஸ்ட்ரீமிங் வெளியீட்டில் பன்முகத் திரைப்படக் கலைஞர் எஸ்.ஜே. சூர்யா தனது அறிமுகத்தை தொடங்குகிறார்.

வெலோனி என்ற பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கும் சஞ்சனாவும் இந்தத் தொடரில் முதல் முதலாக அறிமுகமாகிறார், மற்றும் லைலா, எம். நாசர், விவேக் பிரசன்னா, குமரன், மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் அடங்கிய ஒரு நட்சத்திரப்பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கிசுகிசுக்கள் என்று பொருள்படும் வதந்தி என்ற தலைப்புக்கு இணங்க, இதன் அறிமுக நடிகையாக சஞ்சனா (Sanjana) ஏற்றுள்ள இளம் மற்றும் அழகு ததும்பும் வெலோனி என்ற கதாபாத்திரத்தின் வதந்திகளால் நிறைந்த ஒரு புதிரான உலகிற்கு இந்தக் கதைக்களம் உங்களை அழைத்துச் செல்கிறது. சற்று மனக்கலக்கத்துடன் ஆனால் மன உறுதியோடு கூடிய காவல் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யா (S.J. Suryah), பொய்களால் ஆன ஒரு வலையில் தான் சிக்குண்டுள்ளதை அறிகிறார், ஆனாலும் உண்மையைக் கண்டறிவதில் தன் விடா முயற்சியை தொடர்கிறார். ஓரு செல்வச் செழிப்பான அடுக்குகளால் ஆன ஒரு சிறிய நகரம் வெலோனியின் கதையை சிக்கலானதாக ஆக்கும் அதே சமயம் அதை ஒரு புதிரான விந்தைகள் நிறைந்ததாகவும் மாறசெய்கிறது. இந்த திரைப்படத்தில் லைலா(Laila) , எம். நாசர்,(M.Nasser), விவேக் பிரசன்னா (Vivek Prasanna), குமரன் (Kumaran), மற்றும் ஸ்மிருதி வெங்கட் (Smruthi Venkat) போன்ற பிரபலமான நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். “எங்கள் பார்வையாளர்களின் வளர்ந்து வரும் ரசனைக்கு இணங்க அதற்கு மேலும் அதிகமான தீனியை அவர்களுக்கு வழங்கும் வகையில் உண்மையான, நிலைநாட்டப்பட்ட மற்றும் பல்வேறு வகையான கதைக்களங்களை நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம், அதன் ஒரு தொடர்ச்சியாக வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனியின் கதையை அவர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்” என்று பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் இன் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார். ” சுழல் – தி வோர்டெக்ஸ்க்குக் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து., புஷ்கர் மற்றும் காயத்ரியுடனான எங்களின் இரண்டாவது கூட்டு முயற்சியில் உருவான வதந்தி – எங்கள் பிராந்திய உள்ளடக்க வழங்கல்களுக்கு மேலும் வலுவூட்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பண்படுத்தப்படாத, உணர்வுகளின் பின்னணியோடு மனதைக் கொள்ளைக்கொள்ளும் இந்த அற்புதமான திரில்லரை ஆண்ட்ரூ லூயிஸ் திறம்பட எழுதி இயக்கியிருக்கிறார். ரசிகர்களை அவர்களது இருக்கையில் கட்டிப்போட்ட வைக்கும் உன்னதமான நடிப்புத் திறன் கொண்ட இதன் நட்சத்திர நடிகர்கள், தங்களது சக்திவாய்ந்த மற்றும் மயக்கும் நடிப்பால் இந்தக் கதைக்கு உயிர் ஊட்டியுள்ளனர்.” .

“இன்றைய ரசிகர்கள் தாங்கள் எதை விரும்பிப் பார்ப்பது என்பதில் ஒரு தெளிவான சிந்தனையை கொண்டிருப்பதால், அவர்களுக்கான ஒரு வித்தியாசமான, தனித்துவம் வாய்ந்த மற்றும் மனதில் ஆழ்ந்து பதியக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட கதைக்களத்தை உருவாக்குவது மிக முக்கியமான ஒன்று என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். குற்றச்செயல்களை கலை வடிவத்தின் ஒரு யுத்தியாக கையாளுவது கதை சொல்வதை ஒரு அலங்காரமற்ற மற்றும் இயற்கையான முழுமையான வடிவத்தில் வெளிப்படுத்துகிறது. வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனியின் மூலமாக, பார்வையாளர்களின் கற்பனாசக்தியை முழுமையாக வெளிக்கொண்டுவந்து, சமூகத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்குவதே எங்கள் நோக்கம். இந்தக் கதை பார்வையாளர்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், இறுதியில் நன்றியறிவிப்பு வெளியிட்ட பிறகும் நீண்ட நேரத்திற்கு அவர்களை சிந்தனை வயப்படுத்தும்” என்று இந்தத் தொடரின் படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் தெரிவித்தனர்.


” எழுத்தாளர்-இயக்குனர்-படைப்பாளி என்ற பன்முகம் கொண்ட ஆண்ட்ரூ லூயிஸுடன் இந்த பரபரப்பான க்ரைம் த்ரில்லரை உருவாக்க ஒரு பொதுவான கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்டு இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் அருமையாக உணர்ந்தோம். எஸ்.ஜே. சூர்யா போன்ற ஒரு மூத்த கலைஞர் தலைமையிலான ஒரு உன்னதமான திறமையுடன் கூடிய நட்சத்திரக் குழுவோடும் மற்றும் சஞ்சனா போன்ற புதிய அறிமுகங்களோடும் நிறைந்த இந்தத் தொடர் அதன் இறுதிக் காட்சி வரை ரசிகர்களை கட்டுண்டுகிடக்கச்செய்யும் .இந்த டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியிடப்படும் வதந்தி ரசிகர்களை நிச்சயமாகக் கவரும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *