பிரமிக்க வைக்கும் தளபதி 67 உடைய ஓடிடி விலை
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ படம் மூலமாக அறிமுகமாகி, அதன் பின்னர் ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்ஹ்டு முக்கிய இயக்குனர் பட்டியலுக்குள் சென்றான். இந்த மூன்று படங்களும் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைப் பெற்றன. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இவர் இயக்கி கடசியாக வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றாக மாறி, மாபெரும் ஹிட்டானது.
இதை அடுத்து நடிகர் விஜய் உடன் இணைந்து ‘தளபதி 67’ திரைப்படத்தை உருவாக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷ் கனகராஜ் இயக்க போகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இப்படத்தில் சஞ்சய் தத், விஷால், திரிஷா உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகானும் இப்படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுபோக நிவின் பாலி, டான்ஸ் மாஸ்டர் சாண்டி என பல முக்கிய முகங்கள் திரைப்படத்திற்குள் நுழைய இருக்கிறார்கள்.
இந்நிலையில், பூஜை கூட போடாத இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் ரூ. 160 கோடிக்கு ஓடிடி ரைட்ஸை வாங்கி இருப்பதாக தகவல் பரவுகிறது. திரையரங்கில் வெளியான பிறகு, ஓடிடியில் திரையிடுவதற்கான ஒப்பந்தம் தான் இது என்று கூறப்படுகிறது. இது மிகப்பெரிய சாதனை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது