நடிகர் கார்த்தியின் அடுத்த பான் இந்திய படம்
கார்த்தியின் ஜப்பான் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பல மொழிகளில் ரிலீஸாகப் போகுது
கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த விருமன் ,பொன்னியின் செல்வன் மற்றும் சர்கார் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
இச்சூழலில் அடுத்ததாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகும் படமான ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ராஜூமுருகன் இயக்கும் இந்த இப்படத்தில் அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார்
இந்த ஜப்பான் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
ரவிவர்மன் ஒளிப்பதிவில், GV.பிரகாஷ் குமார் இசையமைக்கும் ஜப்பான் படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அன்பறிவு மாஸ்டர்ஸ் ஆக்சன் பணிகளை பார்த்து கொள்கிறார்கள்.
தனக்கே உரித்தான பாணியில் தரமான கதைக்களங்களையும் நல்ல கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளை பெறும் நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக ஜப்பான் திரைப்படம் தயாராகுவது குறிப்பிடத்தக்கது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், இந்த ஜப்பான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மட்டுமின்றி இந்தியிலும் வெளியாகும் படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள். இதையடுத்து கார்த்தி ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப்பட ரசிகர்களும், ஜப்பான் ஃபர்ஸ்ட் லுக் காண ஆவலாக இருக்கிறார்கள்.