நடிகராக அவதாரம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ். இவர் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களும் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைப் பெற்றன. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் நடிச்ச ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். அதுவும் மாபெரும் ஹிட்டானது.
இதை அடுத்துநடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ திரைப்படத்தையும் லோகேஷ் இயக்க உள்ளார். இந்த நிலையில், அவர் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோகுல் இயக்கத்தில் ஆர். ஜே. பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே இவர், ‘ மாஸ்டர்’ படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் ஒரே ஒரு நிமிடம் மட்டும் நடித்து இருந்தார். நடிகர் விஜய் கேட்டுக் கொண்டதால் நடித்தாக அப்போது லோகேஷ் தெரிவித்து இருந்தார்.
தற்போது ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் ஒரு சில காட்சிகள் அவர் நடிப்பதாக செய்தி வெளியாகி இருக்குது.. அது போக நாளை சிங்கப்பூர் சலூன் படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் அவர் தான் வெளியிட இருக்கிறார்