ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணையும் படம் பூஜையுடன் துவங்கியது

ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணையும் படம் பூஜையுடன் துவங்கியது

 

 

கடந்த 2012ல் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

‘ லால் சலாம்’ என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு AR ரஹ்மான் இசை அமைக்க , விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். தயாரிப்பு மேற்பார்வை சேது பாண்டியன் , நிர்வாக தயாரிப்பாளர் N சுப்ரமணியன் .

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப குழுவினர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று head of lyca production gkm தமிழ் குமரன் தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *