அனிருத், விஜய் சேதுபதி, பிரபுதேவா, பிரசாந்த் எனும் வித்தியாச கூட்டணி!!!

அனிருத், விஜய் சேதுபதி, பிரபுதேவா, பிரசாந்த் எனும் வித்தியாச கூட்டணி!!!

டாப்ஸ்டார் பிரஷாந்த் நடித்துவரும் அந்தகன் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஏராளமான முன்னணி நடிகர்களுடன், தயாரித்து இயக்கி வருகிறார் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன். இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த அந்தாதூன் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த அந்தகன் திரைப்படம். இந்த திரைப்படத்தின் மூலமாக மீண்டும் திரைதுறைக்கு ரீ என்டரி கொடுக்கவிருக்கிறார் டாப் ஸ்டார் பிரசாந்த்.

படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிகட்ட காட்சிக்காக “டோர்ரா புஜ்ஜி” என்ற பாடலை ராக்ஸ்டார் அனிருத் மற்றும் மக்கள் செல்வன் விஜயசேதுபதி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு நடனம் அமைத்து இயக்குகிறார் நடனபுயல் பிரபுதேவா . பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சி படமான உடனே அந்தகன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அந்தகன் படத்தை கலைப்புலி S தாணு அவர்கள் உலகமெங்கும் திரையிட திட்டமிட்டு வருகிறார்.

மிகுந்த எதிர்பார்க்கு மத்தியில் உருவாகி வரும் அந்தகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *