புனித் ராஜ்குமார் உடைய கடைசி படம்?
கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகனும், டாப் ஹீரோ சிவராஜ்குமாரின் தம்பியுமான புனித் ராஜ்குமார், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தார். இவர் ஆரம்பத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
அதன் பிறகு 2002-ஆம் ஆண்டு வெளியான ‘அப்பு’ தான் புனித் கதையின் நாயகனாக நடித்த முதல் படம். இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு புனித் ராஜ்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அபி, வீர கன்னடிகா, மௌரியா, ஆகாஷ், அஜய், அரசு, வம்ஷி, ராம், ப்ரித்வி, ஜாக்கி, பரமாத்மா, அண்ணா பாண்ட், பவர், ரண விக்ரமா, சக்ரவியூகா, ராஜகுமாரா, அஞ்சனி புத்ரா, யுவரத்னா’ என கன்னட படங்கள் குவிந்தது. திடீரென்று ஏற்பட்ட அவரது இறப்பு அனைவரையும் கலங்க வைத்தது. திரை துறையினரும், மக்களும் பெரும் வருத்ததிற்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் அவர் கடைசியாக நடித்த படங்களில் ஒன்றான டாக்குமென்ரி வகையை சேர்ந்த ” காந்தாத குடி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் கண்ணீருடன் அரங்குகள் நிரம்பி வழிகிறது. புனித் ராஜ்குமாரை கடவுளாக போற்றும் கர்நாடக மக்கள் தியேட்டரில் தங்கள் நாயகனை பார்க்க சென்று கொண்டு இருக்கின்றனர்.