வாரிசு படத்தின் கதை இந்த படத்துடையதா?
விஜய்யின் வாரிசு படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் லீக் ஆகி படக்குழுவிற்கு அதிர்ச்சியை அளித்து வந்தது.
இந்த சூழலில் பிரபல வார இதழ் ஒன்றுக்கு இயக்குனர் வம்சி அளித்த பேட்டியும், வாரிசு படத்தின் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. அதைப் பார்த்த ரசிகர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் படத்தை தான் மீண்டும் வம்சி எடுத்து இருக்கிறார் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதே வம்சி டைரக்ஷனில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான மகரிஷி படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதோடு தேசிய விருதையும் பெற்றது. தற்போது அதே படத்தை மீண்டும் எடுத்துள்ளார் வம்சி என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதாவது மகரிஷி படத்தில் உள்ள புகைப்படங்களும், இந்த புகைப்படங்களும் பெரும்பாலானவை ஒத்துப் போகிறது. ஏற்கனவே தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் தமிழில் ரீமேக் செய்து விஜய் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது மகரிஷி படத்தின் கதை தான் வாரிசு என கூறப்படுகிறது.
ஆனால் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. ஆகையால் ஏற்கனவே தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மகரிஷி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் காபி தான் வாரிசு படம் என்று தெரிந்தால் அதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனாலும் வாரிசு படம் வெளியாவதற்கு முன்பே இந்த புகைப்படத்தால் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால் வாரிசு படம் வெளியான பிறகு தான் மகரிஷி படத்தின் கதையா இது என்பது தெரியவரும்.