வாக்கு தவறிய வடிவேலு!!

வாக்கு தவறிய வடிவேலு!!

நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, தமிழக அரசு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட பலரும் அவரது மருத்துவ செலவிற்காக உதவி செய்தார்கள்.

நடிகர் போண்டா மணி, வடிவேலே மற்றும் பல முக்கிய நகைச்சுவை நடிகர்களுடன் திரையை பகிர்த்துள்ளார். பல முக்கிய நகைச்சுவை காட்சிகளில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போன செய்தி திரையுலகில் பேசு பொருளாக மாறியது. பல முக்கிய நடிகர்கள் அவருக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வந்தனர்.

ஆனால் நடிகர் வடிவேலுவிடமிருந்து எந்த ஒரு உதவியும் தனக்கு கிடைக்கவில்லை என்பதால் போண்டாமணி தனக்கு வருத்தமாக உள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில், அண்மையில் ஒரு பேட்டியில் போண்டாமணிக்கு நீங்கள் உதவி செய்வீர்களா என வடிவேலுவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,நான் உதவாமல் வேறு யார் அவருக்கு உதவுவார், கண்டிப்பாக அவருக்கு நான் உதவி செய்வேன் என பேசினார்.

இருந்தாலும் தற்போது வரை வடிவேலு,போண்டாமணிக்கு உதவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *