துணிவு அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்யும் அபாயகரமான காரியம்

துணிவு அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்யும் அபாயகரமான காரியம்

சமீப காலங்களில் பல்வேறு திரைப்பட நடிகர்களுக்கு அவர்களது ரசிகர்கள் பல வகையில் வித்தியாசமாக பிறந்த நாள் வாழ்த்து, புதிய திரைப்படம் ரிலீஸ் போன்றவற்றுக்கு பல்வேறு வகையில் வரவேற்பு கொடுத்தும், வித்தியாசமாக செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் துணிவு படத்தின் அப்டேட் கேட்டு தனது கையில் பிளேடால் எழுதி அதனை செல்போனில் படம் பிடிச்சு பிரஞ்ச் சிட்டி அஜித் ஃபேன்ஸ் என்ற whatsapp குழுவில் பதிவேற்றம் செய்து இருக்கிறார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. குரூப் அட்மின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்அவுட்டிற்கு பால் ஊற்றுவது, காவடி எடுப்பது இதுபோன்ற செயல்களை நடிகர் அஜித் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. ஏற்கனவே தனக்கென இருந்த ரசிகர் மன்றத்தையும் நடிகர் அஜித் கலைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *