வாரிசு படத்தின் முதல் சிங்கிள் லீக் ஆகியுள்ளது!!!

வாரிசு படத்தின் முதல் சிங்கிள் லீக் ஆகியுள்ளது!!!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ் ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட மற்றும்பல நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இது தான் தமனும், விஜயும் இணையும் முதல் திரைப்படம்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், வாரிசு படத்தின் அந்த முதல் சிங்கிள் தற்போது இணையத்தில் லீக்காகி இருக்கிறது. ரஞ்சிதமே எனும் ஒலிக்கும் இப்பாடலை விஜய் பாடியுள்ளார். எற்கனவே வாரிசு படத்தில் இருந்து பல காட்சிகள் லீக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் இப்போது விஜய் பாடி இருக்கும் இந்த பாடல் வெளியாகி இருப்பது, பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

இந்நிலையில் எதிர்பார்த்தபடி தீபாவளி அன்று வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் வருமா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *