இரண்டு படத்தையும் பார்த்து ரசியுங்கள்- சிவகார்த்திகேயன்
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமா வளர்ந்து இருப்பவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில் படங்களை தயாரிப்பிலும், நடிப்பிலும் உருவாக்கி கொண்டு இருக்கும் இவரது நடிப்பில் கொரானாவிற்கு பிறகு வெளியான டாக்டர் திரைப்படமும், டான் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து திரையரங்குகளுக்கு மக்களை கூட்டிவந்தது. இந்த இரண்டு படங்களுக்கு இவர் தயாரிப்பாளராகவும் இருந்தார். அந்த வகையில் அடுத்ததாக வெற்றியை காண அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் “பிரின்ஸ்” திரைப்படம் தீபாவளி விருந்தாக அக்டோபர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தான் சிவகார்த்திகேயன் அவர்களின் முதல் தீபாவளி வெளியீடு என்பது கூடுதல் சிறப்பு.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து இந்த படத்தினை தயாரித்து இருக்கிறார்கள்.
இந்த படம் தமிழ்,தெலுங்கில் Bilingual-ஆக உருவாகி இருக்கிறது. அனுதீப் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யராஜ்,பிரேம்ஜி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் Maria Ryaboshapka என்ற உக்ரைன் நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் சில பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ப்ரின்ஸ் பட ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் அதன் புரொமோஷன் பிரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது.
அவ்விழாவினில் நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை பற்றி கூறியதாவது…” இந்த திரைப்படம் இந்திய பையனுக்கு, லண்டன் பொண்ணுக்கும் இடையே நடக்கும் காதல் கதை. அதை சுவாரஷ்யமாகவும், காமெடியாகவும் சொல்ல முயற்சித்து இருக்கிறோம். இந்த படத்தின் மூலம் தெலுங்கு இயக்குனர் அனுதீப் தமிழில் அறிமுகம் ஆகிறார். அவரது எழுத்து இங்கு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்க நானும் ஆவலாய் இருக்கிறேன். பிரின்ஸ் திரைப்படத்துடன் கார்த்தியின் சர்தார் படமும் திரைக்கு வருகிறது. மக்கள் இரண்டிற்கும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.