தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்கள் ஒரே படத்தில்!!!
நடிகர் தனுஷும் சிம்பும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை தயாரிப்பது பிரபல நிறுவனம் என்றும் தகவல் வெளியாகி, தமிழ் சினிமாவில் பரப்பரப்பு பேச்சை உருவாக்கி இருக்கிறது.
கோலிவுட்டின் சினிமாவில் தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோர் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். இருவரும் பல ஹிட் படங்களையும், பல பரிணாமங்களையும் எடுத்துள்ளனர். இருவருக்குமே இயக்கம், பாடல் வரிகள், இசை என பல்துறை திறமைகள் அதிகம் உள்ளன.
வெள்ளித்திரையில் ஒருவருக்கொருவர் போட்டியாளர்கள் என்று இருவரும் கூறப்பட்டாலும், திரைக்குப்பின்னால் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘நானே வருவேன்’ மற்றும் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுத்துள்ளன.
இந்த நிலையில் தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோர் அடுத்ததாக ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் கதை தனுஷ் எழுதி, திரைக்கதையை சிம்புவும், தனுஷும் சேர்ந்து எழுதுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது, அதோடு அந்த படத்தை தனுஷ் இயக்கவிருப்பதாகவும், அதை அவருடைய வுண்டர்பார் நிறுவனமே தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது. . மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.