பிரபல நடிகை தற்கொலை!!!

பிரபல நடிகை தற்கொலை!!!

பாலிவுட் சின்னத்திரை நடிகை ‘வைஷாலி தக்கர்’ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி டிவி சீரியல் நிகழ்ச்சிகளில், பிரபல நடிகையாக இருப்பவர் வைஷாலி தக்கர். 29 வயதாகும் இவர், இந்தி வட்டாரத்தில் நன்றாக பரிட்சையபட்ட சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் வைஷாலி தொடர்ந்து ஆக்டிவாக இருந்துவருபவர்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள தனது வீட்டில் இன்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வீட்டில் வைஷாலி தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தார்.

இன்று முழுவதும் அவரது அறை திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டில் இருந்தவர்கள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது ஃபேனில் தூக்கிட்டு வைஷாலி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையே கடிதமொன்றை எழுதி வைத்து விட்டு வைஷாலி உயிரிழந்ததாகவும், அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனடிப்படையில் அவரது முன்னாள் காதலனின் இடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். முன்னாள் காதலனின் டார்ச்சரே இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *