பள்ளி மாணவர்களுக்கு தி ரெட் பலூன்

பள்ளி மாணவர்களுக்கு தி ரெட் பலூன்

தி ரெட் பலூன்

மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது

பள்ளிக் கல்வி துறை சாா்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, சிறாா் திரைப்படங்கள் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று பிரஞ்சு மொழியில் ஆஸ்கார் விருது பெற்ற “தி ரெட் பலூன்”(1956) திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

Albert Lamorisse இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை அவரே எழுதியுள்ளார். நிறைய விருதுகளை வாரி குவித்த இந்த திரைப்படம் இந்த மாத திரையிடலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. திரைப்படதுறையில் உயரிய விருதுகளில் ஒன்றான Palme d’Or விருதை இந்த திரைப்படம் வென்றுள்ளது. இந்த திரைப்படத்திற்கு Edmond Séchan ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *