நேர்மையின் அருமை பேசும் படைப்பு – திரு மாணிக்கம் !!
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி, பாரதிராஜா, அனன்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் திரு மாணிக்கம். இந்த வாரம் வெளியாகியிருக்கும் இந்தப்படம் எப்படி இருக்கிறது ?
இந்தக்கால கட்டத்தில் மனிதனின் நேர்மை என்பது எத்தனை கேலிக்குறியதாகி விட்டது என்பதை பலமாக பேசியிருக்கும் படம் திரு மாணிக்கம். சமுத்திரக்கனி மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் கேரளாவில் வாழ்ந்து வருகிறார். குடும்ப பிரச்சனை, கடன் சுமை என பல பிரச்சினை இருந்தாலும் நேர்மையாக வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி. லாட்டரி சீட்டு விற்பனை செய்வதுதான் இவருடைய தொழில்.
ஒரு நாள் இவருடைய கடைக்கு வரும் பாரதிராஜா லாட்டரி சீட்டு வாங்குகிறார். அவரிடம் பணம் இல்லாததால் அவரது சீட்டை எடுத்து வைக்க சொல்லிச் செல்கிறார். கடைசியில் அந்த சீட்டுக்கு ஒன்றரை கோடி பணம் கிடைக்கிறது. பாரதிராஜாவிடம் கொண்டு சேர்க்க சமுத்திரக்கனி புறப்படுகிறார். ஆனால் மனைவி உறவினர்கள் அந்த பணத்தை நாமே வைத்துக் கொள்ளலாம் என வற்புறுத்துகின்றனர்.
இருந்தாலும் நேர்மையோடு புறப்படும் சமுத்திரக்கனி பாரதிராஜாவை சந்தித்தாரா? அவருடைய நேர்மைக்கு கிடைத்த பலன் என்ன? என்பது தான் இப்படம்
ஒரு காலம் இருந்தது. ஒரு நல்ல மனிதன் என்பவன் நேர்மையானவன் என்பதாக இருந்தது. அவனை எல்லோரும் கொண்டாடினார்கள் ஆனால் இன்றைய காலகட்டத்தில் நேர்மையாளம் என்பவன் ஏமாளி என்பதாகிவிட்டது. நேர்மை என்பது எல்லோருக்கும் வேண்டும் அதை மிகச்சிறப்பாக பேசியுள்ளது இப்படம்.
சமுத்திரகனிக்காகவே எழுதிய பாத்திரம் அப்படியே பொருந்தி விடுகிறார். அவர் மறைந்து அவரின் னேர்மை தான் நம் கண் முன் தெரிகிறது. சீட்டை தொலைத்து தேடும் இடத்தில் கண் கலங்க வைத்து விடுகிறார். அவர் திரை வாழ்க்கையில் இது கண்டிப்பாக மிக முக்கியமான படம்.
அனன்யா வெகு சாதாரணமாக நாம் தினம் பார்க்கும் குடும்ப பெண்ணை, நம் கண் முன் நிறுத்துகிறார். அவரும் நல்லவரே ஆனால் அவரது குடும்ப கஷ்டம் அவரை அப்படி யோசிக்க வைப்பதை முகத்தில் கொண்டு வந்துள்ளார். பாராதிராஜாவிற்கு சின்ன வேடம் ஆனால் அசத்தியிருக்கிறார்.
மொத்தப்படத்திற்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறது தேனி ஈஸ்வரின் கேமரா. அதே போலவே விஷால் சந்திரசேகேர் இசை படத்திற்கு உயிர் சேர்த்திருக்கிறது.
காட்சி, காட்சியாக சுவாரஸ்யத்தோடு கதையை கோர்த்தது நந்தா பெரியசாமி தானா? என ஆச்சரியப்பட வைத்துள்ளார் இயக்குநர். அவருக்கு இது பெயர் சொல்லும் படம்.
நேர்மையை கொண்டாடும் திரு மாணிக்கத்தை நாமும் கொண்டாடலாம்.
நம்ம tamilprimenews rating 2.3/5