சரத்குமாரின் ஸ்மைல் மேன் – எப்படி இருக்கிறது !!

இயக்குநர்கள் ஷ்யாம் மற்ரும் பிரவீன் இயக்கத்தில் தமிழின் முன்னனி நடிகராக வலம் வரும் சரத்குமார் மீண்டும் நாயகன் வேடமேற்று நடித்திருக்கும் படம் ஸ்மைல் மேன். அவரது 150 வது படமாக இந்த வாரம் வெளியாகியிருக்கும் இந்தப்படம் எப்படி இருக்கிறது ?
மெமரீஸ், க் படங்களை இயக்கிய ஷ்யாம் பிரவீன் கூட்டணி மிஈண்டும் திரில்லர் ஜானரில் இயக்கியிருக்கும் படம் இது
சிபிசிஐடி அதிகாரியான சரத்குமார், ஸ்மைல் மேன் என்ற சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது விபத்தில் சிக்கி உடல் நிலை பாதிக்கப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தாலும் அல்சைமர் என்ற மறதிநோயால் பாதிக்கப்படுகிறார். அவரது உயரததிகாரி அந்த கொலையாளியை கொலை செய்து விட்டு காணாமல் போகிறார்.
சில வருடங்களுக்குப்பிறகு மீண்டும் தொடர் கொலைகள் அதே பாணியில் நடைபெற ஆரம்பிக்கிறது. கொலையாளிக்கும் தனக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கும் சரத்குமார். போலீஸ் குழுவுடன் சேர்ந்து, அந்த கொலையாளியை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். அவர் கொலைகாரனை பிடித்தாரா? இல்லையா? என்பது தான் கதை.
க்ரைம் வகை படங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை. கொலை, அதை விசாரிப்பது , யார் கொலையாளி இந்த சுவாரஸ்யங்கள் சரியாக அமைந்து விட்டார் க்ரைம் வகையறா கண்டிப்பாக ப்ளாக்பஸ்டர் தான்.
இந்தப்படத்தின் கதையும் கொலையாளியை கண்டுபிடிக்கும் கதை தான்.
சிதம்பரம் நெடுமாறன் என்ற சிபிசிஐடி அதிகாரியாக நடித்திருக்கிறார் சரத்குமார். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னால் முடிக்க முடியாமல் போன வழக்கை முடிக்க போராடும் ஒரு அதிகாரியாக அளவாக நடிப்பு மிகச்சிறப்பு. இத்தனை வருட நடிப்பில் அந்த கேரக்டரை மிக ஈஸியாக செய்து அசத்திவிடுகிறார்.
கொலையை விசாரிக்கும் மற்றொரு அதிகாரியாக இன்னொரு ஹீரோவாக நடித்திருக்கிறார் ராஜ்குமார். அறிமுக தடுமாற்றங்களை கடந்தால் இன்னும் சிறப்பாக வருவார்.
சுரேஷ் மேனன், நட்ராஜன், மலைராஜன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களுக்கு முக்கிய பங்கு இல்லை என்றாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
இனியாவின் ப்ளாஷ்பேக் தான் படத்தின் மையம் அதை அவர் சிறப்பாகவே செய்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன், இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஸ், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் எல்ளோரும் தங்களது பணியை திறம்பட செய்துள்ளனர்.
திரைக்கதையாக சுவாரஸ்யமாக இருக்கும் படம் காட்சிகளாக விரியும்போது அந்த சுவாரஸ்யம் நம்மிடம் இல்லை.
சீரியல் கொலையாளி தொடர் கொலைகள் செய்தாலும் அதுவும் நம்மிடம் பாதிப்பை தரவில்லை. ‘ஸ்மைல் மேன்’ பெரிதாக பயம் காட்டவில்லை ஆனாலும் ஒரு முறை பார்க்கலாம்.
திரைக்கதையில் சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும், தொழில்நுட்ப கலைஞர்களின் பணி, முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களின் திரை இருப்பு மற்றும் மேக்கிங் ஆகியவை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.
நம்ம tamilprimenews rating 3/5