சிங்கப்பூர் சலூன் திரைப்படம் விமர்சனம்..
வேல்ஸ் ஃபிலிம்ஸ் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் RJ பாலாஜி சத்யராஜ் லால் YG மகேந்திரன் கிஷன் தாஸ் ரோபோ சங்கர் ஜான் விஜய் மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் சிங்கப்பூர் சலூன்.
கதை என்ன..open பண்ணா..
Rj Balaji அவர் நண்பர் இருவரும் அந்த கிராமத்தில் லால் நடத்தி வரும் சலூனில் அவரிடம் நெருங்கி பழகுகிறார்கள்..அவரின் hair cutting ஸ்டைல் பார்த்து வளரும் நம்ம ஹீரோ வளர்ந்த பின் பெரிய சலூன் ஆரம்பிக்கும் எண்ணத்தில் கல்லூரிக்கு போக மறுக்கிறார்..அவர் தந்தை 4 வருடம் கல்லூரி படிப்பை முடி..அப்புறம் உன் ஆசை இதுவாக இருந்தால் நான் தடுக்க மாட்டேன் என்று சொல்ல கல்லூரிக்கு செல்கிறார்..அங்கு ஒரு காதல்..அது இவர் சலூன் ஆசையை அறிந்து கழன்று கொள்ள..அப்பாவின் விருப்பப்படி தன்னை விரும்பும் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்..இவர் மனம் பெரிய hair style சலூன் ஆரம்பிக்க தேவையான பணம்.. அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள்..ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சி..அதில் ஒரு சமூக கருத்து..
வாங்கிய கடன் கழுத்தை நெரிக்க.. தொழில் போட்டி ஒரு பக்கம்.. இயற்கை பேரிடர் இன்னொரு பக்கம்.. இவற்றுக்கு நடுவே சிங்கப்பூர் சலூன் ஆரம்பித்து அதனால் ஏற்படும் பின் விளைவுகளை பல கிளை கதைகளோடு எடுத்து கொண்டு பயணம் போகிறார் இயக்குனர் கோகுல். ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் படத்தை எங்கே முடிப்பது என கேட்க அவசர கதியில் வில்லன் இல்லாமல் (ssshhppaa ).ஒரு ஆறுதல்..!!!
கிளைகதைகள் கூட கிளைகள் இல்லாமல் கிளிகள் மூலம் பயணம் முடித்து வைக்க படுகிறது… அமஞ்சிகரை sorry Singapore saloon Logic ஓட்டைகளை தாண்டி சிரிப்புக்கு சத்யராஜ் ரோபோ சங்கர் YG மகேந்திரன் இவர்கள் combo கேரண்டி..!!
இடைவேளை யில சிரித்து கொண்டே மக்கள் popcorn சாப்பிட போவது உறுதி…
அடுத்து இரண்டாம் பாதி இயக்குனர் மற்றும் எடிட்டர் கத்திரி சாணை பிடிக்காமல் ஆங்காங்கே குதறி வைத்து விட்டார்கள்… கேமராமேன் சில close-up காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்..!!
அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் சிங்கப்பூர் சலூன்…
நம்ம tamilprimenews.com rating 3.2/5