தூக்குதுரை திரை விமர்சனம்!

தூக்குதுரை திரை விமர்சனம்!

ஒரு கிராமத்தில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஊர் கோவில் திருவிழாவில் மட்டும் ஒரு கிரீடம் மக்களிடம் காண்பிக்கப்படுகிறது அந்த விலை மதிப்பில்லாத கிரீடத்தை ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்டிப்பாட்டில் வைத்து தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வருகிறார்கள். அந்த வகையில், ராஜ குடும்பத்தின் தற்போதையை தலைமுறையான ஒருவர் அந்த கிரீடத்தை பாதுகாத்து வருகிறார். இந்த நிலையில் அந்த கிரீடம் போலியானது என்றும், உண்மையான கிரீடம் அந்த ஊரில் உள்ள பழைய கிணற்றில் இருப்பதும் தெரிய வருகிறது, அந்த உண்மை தெரிந்த பிறகும், ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களும் அந்த ஊர் மக்களும் கிணற்றில் இறங்கி கிரீடத்தை எடுக்க பயப்படுகிறார்கள். இறுதியில் அந்த கிரீடத்தை எடுத்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை

இந்தப் படத்தில் யோகிபாபு வரும் காட்சிகள் மிகக்குறைவுதான் ஆனாலும் படம் முழுக்க அவரை சுற்றி நடப்பது போல தான் திரைக்கதை அமைந்துள்ளது , எனினும் யோகி பாபு தனது வழக்கமான நக்கல் வசனங்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். ஆனால், அவர் சில காட்சிகளில் மட்டுமே வருவதால் மற்ற காட்சிகள் ரசிகர்களை சோதித்து விட்டது , படத்தில் யோகி பாபு இல்லாதது தெரிய கூடாது என்பதற்காக ஒரு நடிகர் பட்டாளத்தையே இதில் நடிக்க வைத்துள்ளார் இயக்குனர், பாலசரவணன், மகேஷ், செண்ட்ராயன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் கூட்டணி கடுமையாக உழைத்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள் ஆனால் அதில் பெரிய பலன் இல்லை. யோகி பாபுவிற்கு ஜோடியாக நடிகை இனியா நடித்துள்ளார். அவரும் சிரு காட்சிக்கு மட்டுமே வந்து போகிறார்.

Thookudurai (2024) - IMDb
படத்தில் ரவிவர்மாவின் ஒளிப்பதிவும், கே.எஸ்.மனோஜின் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. இது பெரிதும் உதவவும் இல்லை என்றாலும் அதில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. படத்தொகுப்பாளர் தீபக் எஸ்.துவாரகனாத், ஒரு நகைச்சுவை கலந்த த்ரில்லர் ஜானர் படத்தை எப்படி காட்சிப்படுத்துவது என்பதில் மிகவும் குழம்பியுள்ளார்.

இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கும் டெனிஸ் மஞ்சுநாத், முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை உருவாக்கியுள்ளர், அது மட்டுமில்லாமல் படத்தின் முடிவில் ஒரு கருத்தையும் சொல்லி இருக்கிறார். யோகி பாபுவிற்கு இன்னும் சில காட்சிகள் வைத்து திரைக்கதைக்கு இன்னும் சில மெனக்கெடல்கள் செய்திருந்தால் இந்தப்படம் கண்டிப்பக பலரும் பேசும் வண்ணம் உருவாகியிருக்கும்.

 

மொத்தத்தில், இந்த ‘தூக்குதுரை’ படம் ரசிகர்களிடம் சென்றடைய திரைக்கதையில் சில தூக்கல்கள் தேவைப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *