Shoot the kuruvi… குறும்பட விமர்சனம்
KJ ரமேஷ்.- R. சஞ்சய் குமார் தயாரிப்பில் VJ ஆஷிக் ,ஷாரா, அர்ஜெய்,சுரேஷ் சக்கரவர்த்தி, ராஜ்குமார். மற்றும் பலர், நடிக்க பிளாக் காமெடி கிரைம் திரில்லராக உருவாகி இருக்கும் படம் தான் ஷூட் த குருவி… இக்குறும்படத்தை இயக்கி நம்மை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் மதிவாணன்.
சரி கதை என்ன பார்ப்போம்..i
மாணவ மாணவி இரண்டு பேர் கிரிமினல் குருவிராஜன் பற்றி ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க proffessor ராஜ்குமாரை சந்திக்க வருகின்றனர்… அங்கிருந்து கியர் போட்டு ஸ்டார்ட் ஆகிறார் குருவி… வளர்த்து விட்ட கடத்தல் பாயை போட்டு தள்ளி விட்டு சாதா ராஜன், குருவிராஜன் ஆகிறான்…
இந்த சூழலில் ஈரோடு மாவட்டத்தில் வாழும் ஆஷிக் ஒரு வித்தியாசமான நோயால் பாதிக்கப்படுவதால் அவருக்கு பணம் தேவை.. அந்த வருத்தத்தில் துவண்டு போய் இருக்கும் ஆஷிக்-யை ஊக்கப்படுத்த, கனவில் ஹோலி மனிதராக சுரேஷ் சக்கரவர்த்தி வருகிறார். அவரின் வார்த்தைகளை கேட்டு கையில் பையோடு புறப்படும் ஆஷிக், தன் நண்பனை சந்தித்து ஆதரவு கேட்க, அவன் குருவிராஜன் உடைய அடியாளாக இருக்கிறான், ஆனாலும் சில காரணங்களால் ஆஷிக் அங்கு தங்குகிறான். அங்கே ரூம் நண்பராக ஷாரா இருக்கிறார். ..சும்மா சொல்லக்கூாது. ரெண்டு பேர் காம்போ வயறு குலுங்க சிரிக்க வைப்பது நிச்சயம்..
மோதலில் ஆரம்பித்த நட்பு ..பின்பு ஆழமான பிணைப்பாக உருவெடுக்கிறது. ஆஷிக் 5 ஆசைகள் நிறைவேற்ற ஷாரா உதவும் அளவிற்கு அந்த பிணைப்பு கரைபுரண்டு ஓடுகிறது..
அம்மா பாசம் அறியா ஷாரா விடம் ஆஷிக் அம்மா பாசத்துடன் பேசும் காட்சிகள் awesome ..!!
இதே நேரத்தில் இன்னொரு பக்கம்குருவி ராஜன் தானொரு gangster இல்லை, கில்லர் என்று சொல்லி விட்டு அமைச்சரை கொன்று விட்டு தப்பிக்கிறான். பின்னர் அந்த குருவி ராஜன், ஆஷிக்-யை கொல்ல, ஆஷிக்- ஷாரா இருவரும் இருக்கும் ரூமுக்கு வந்து விடுகிறான் …
இறுதியில் என்ன நடந்தது..? குருவிராஜன் என்ன ஆனார்..? ஆஷிக் ஆசைகள் நிறைவேறியதா?என்பதை கலகலவென ரசித்து ரசித்து எடுத்து இருக்கிறார் இயக்குனர் மதிவாணன்..
அடுத்து வெள்ளித்திரையில் இவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கு..! குருவியை சரியாக ஷூட் செய்துள்ள DOP க்கு பாராட்டுக்கள்..
shortflix OTT தளத்தில் வெளி வந்துள்ள “shoot the kuruvi” அவசியம் பார்க்க வேண்டிய குறும்படம்.
ரசிக்கவும், சிரிக்கவும் பக்காவாய் இருக்கும் இந்த குருவி ..
Tamil Prime News (TPN)rating..3.8/5