இந்த சாதனையை லியோ படம் படைக்குமா!
விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகி கொண்டு இருக்கும் லியோ படத்திற்கு கோலிவுட் தாண்டி இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு வசூலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ திரைப்படம் தமிழகத்தின் முதல் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இந்தப் படம் தவிர மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 600 கோடி வரையும், ரஜினியின் 2.O ரூ.800 கோடியும் வசூலித்துள்ளன. கோலிவுட்டில் அதிகபட்ச வசூல் சாதனையாக இந்தப் படங்கள் தான் டாப்பில் உள்ளன. ஆனால் இந்தாண்டு லியோ திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷின் LCU கான்செப்ட்டும் விஜய்யும் தான், லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்ட முக்கிய காரணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
டோலிவுட்டில் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர், சாண்டல்வுட்டில் யாஷ் நடிப்பில் ரிலீஸான கேஜிஎஃப், பாலிவுட்டில் அமீர்கானின் தங்கல் ஆகிய படங்கள் ஆயிரம் கோடி வசூலை கடந்துள்ளன.
அந்த சாதனைகளை விஜய் – லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகும் லியோ திரைப்படம் தகர்க்கும் என சினிமா ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.