அமர்களமாய் தனது வெற்றியை துவங்கிய தமிழ் சினிமா!
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வருட ஆரம்பமே அமர்க்களமாக துவங்கிவிட்டது, காரணம் இரண்டு பெரிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இரண்டு படங்களும் நல்ல தரமான கதைக்களத்தை கொண்டதால் விமர்சனமும் அமோகமாக வந்துள்ளது.
முதல் நாள் இரண்டு படங்களும் வசூலில் ரூ. 20 கோடியை தாண்டி உள்ளது. தற்போது அஜித்தின் துணிவு திரைப்படம் தமிழகத்தில் ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் விஜய்யின் வாரிசு தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளாவிலும் பெரிய வசூல் செய்து அங்கு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது.
கடந்த வருடம் இரண்டு நடிகர்களின் படங்களும் சரியான வெற்றியை பெறாதது, அவர்களது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. இந்நிலையில் இந்த வெற்றி ரசிகர்கள் கொண்டாடும் வெற்றியாக இருக்கிறது.