ஆஸ்கர் விருதுக்கு நெருக்கமாக செல்லும் “RRR”
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா மற்றும் பலர் நடிப்பில் இந்த ஆண்டில் வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை புரிந்த படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்காகத் தேர்வு செய்யப்படாத நிலையில், நேரடியாக அந்தப் போட்டியில் இப்படம் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கபட்டது. ஆஸ்கார் விருதுக்கான பொதுப் பிரிவுகளிலும் வெளிநாட்டுப் படங்கள் நேரடியாக கலந்து கொள்ள முடியும். அந்த பிரிவில் ஆர் ஆர் ஆர் படத்தை அனுப்ப படக்குழு திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ராஜமவுலி அமெரிக்கா சென்று இருந்தார்.
அங்கு ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் சில சிறப்புக் காட்சிகள் நடைபெற்றது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைப் பற்றி ஆஸ்கர் குழுவுக்கும், அமெரிக்க ரசிகர்களுக்கும் தெரிவிப்பதற்காக பல்வேறு விதமான பிரமோஷன் நிகழ்வுகளும் அங்கு நடைபெற்றது.
அந்த விதத்தில் சில பிரிவுகளில் ‘ஆர்ஆர்ஆர்’ படம் கலந்து கொண்டது. “சிறந்த மோஷன் திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஆடை அலங்காரம், சிறந்த மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்” ஆகிய பிரிவுகளில் இப்படம் போட்டியிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஆஸ்கர் விருதுகள் இறுதி பட்டியலில் இடம்பெற்ற படங்கள் குறித்து ஒரு பட்டியல் வெளியானது. அதில் ஒரிஜினல் பாடல்களுக்கான பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பாடல்கள் பட்டியல் வெளியானது. அதில் RRR படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது. ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதுகள் பட்டியலில் இடம்பெற்றது ‘நாட்டு நாட்டு’ பாடல்