பனி விழும் இரவு திரைவிமர்சனம் ரேட்டிங் 3.1/5

பனி விழும் இரவு
நடிப்பு: அருண் கார்த்தி, எனாக்ஷி கங்குலி, கஜராஜ், உறியடி சுருளி, ஓம் செல்வா, கருப்பு நம்பியார், சரவண சக்தி, சேரன் ராஜ்,
தயாரிப்பு: சதா முருகன், ஜெயக்குமார் இசை: சதா முருகன் ஒளிப்பதிவு ஜெயக்குமார் தங்கவேல்
இயக்கம்: சே ரா ராஜேஷ் பிஆர்ஓ : சரண்
கதை ஓபன் பண்ணா….!
கொடைக்கானலில் இருக்கும் ஒரு பங்களாவிற்கு திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பெண் எனாஷியுடன் போட்டோ சூட் நடத்துவதற்காக வரும் அருண் கார்த்தி.அடுத்த நாளே சிலர் தன்னை அடித்து திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண்ணை கடத்தி விட்டதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார்..முதலில் அதை நம்பாத போலிஸ் பின்னர் ஏற்கனவே அருண் தங்கி இருந்த வீட்டில் தற்கொலை சம்பவம் ஒன்று நடந்திருப்பதால் பெண்ணை தேடப் புறப்படுகிறார்கள்.
இதனையடுத்து அந்த பங்களா செக்யூரிட்டி அக்கம் பக்கத்தினர் என அனைவரிடம் விசாரிக்கிறார் போலீஸ் சேரன் ராஜ் மற்றும் கருப்பு நம்பியார்..ஆனால் அந்த செக்யூரிட்டி உள்ளிட்ட அனைவரும் அவர் மட்டும்தான் வந்தார்.. அப்படி ஒரு பெண்ணை நாங்கள் பார்க்கவில்லை என்கின்றனர்..அந்தப் பெண் என்ன கதியானாள்? பேயின் விளையாட்டு ஏதும் நடந்ததா? அல்லது யாராவது கடத்தி விட்டார்களா? என்று விடை தெரியாத கேள்விகளுக்கு யூகிக்க முடியாதபடி கற்பனை கலந்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்..


அப்படி என்றால் அவர் சொல்லும் அந்த பெண் யார்.? அவர் எங்கு சென்றார் என்பதை எல்லாம் யூகிக்க முடியாதபடி கற்பனை கலந்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்..அருண் கார்த்தி, எனாக்ஷி கங்குலி ஜோடி பேய் நடமாடுவது போல் பயமுறுத்தும் அந்த வீட்டில் தனியாக இருப்பதும், எதிர்பாராத அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதும் நம்மை ஜில்லிட வைக்கிறது.
ஒரு நொடி படத்தில் முக்கிய கேரக்டர் நடித்த அருண் கார்த்திக் இந்த படத்தின் கதை நாயகன்.. நடிப்பில் கவர்கிறார்.. நாயகியாக எனாக்ஷி கங்குலி.. இன்னும் இவரை பயன் படுத்தி இருக்கலாம் ….போலீஸ் சேரன் ராஜ் மற்றும் கருப்பு நம்பியார் இருவரும் நடிப்பில் ஓகே..இவர்களுடன் சரவணசக்தி செக்யூரிட்டி கதாபாத்திரத்திலும், மனோதத்துவ டாக்டராக கஜராஜ் நடித்துள்ளனர்.

ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. சதா முருகன், தங்கவேல் வல்லவர்சாமி, ஓம் செல்வா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். பனி விழும் இரவு படத்தை கிளைமாக்ஸ் வரை அருமையான திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் செ.ரா. ராஜேஷ்.
நம்ம தமிழ் பிரைம் நியூஸ் டாட் காம் ரேட்டிங் 3.1/5



