சிங்காரம் திரைவிமர்சனம் ரேட்டிங் 4.2/5

சிங்காரம் திரைவிமர்சனம்   ரேட்டிங் 4.2/5

சிங்காரம்

நடிப்பு: யோகி பாபு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர்,   மரியா வின்சென்ட்,   ஆர்த்தி கணேஷ், மனோபாலா
கல்கி, மாரிமுத்து,  படவா கோபி,   சென்ட்ராயன், டி.எஸ்.ஆர், தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர்

தயாரிப்பு : ஏ.எஸ். ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி    இசை: சாம் சி எஸ்    ஒளிப்பதிவு :பிரசன்னா எஸ். குமார்

இயக்கம்:கே.வி. கதிர்வேலு   பிஆர்ஓ :ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

கதை ஓபன் பண்ணா….!

இக்கதை 1990 ஆம் ஆண்டு  காலகட்டத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கதைப்படி நரிக்குறவரான யோகிபாபு, தனது தந்தை எம்.எஸ்.பாஸ்கர், அம்மா தீபா, மற்றும் தனது இனத்தவர்களுடன் பொள்ளாச்சி அருகே ஆனைமலைபகுதிக்கு ஊசி பாசிமணிகளை விற்க வருகிறார்.ஆனைமலை பகுதியில் இவர்கள் கூடாரம் அமைத்து அங்கு வசித்து வருகின்றனர்.. இவர்களின் கூட்டத்தில் இருக்கும் பெண்கள் மீது காம ஆசை கொள்கிறார் எம்எல்ஏ தம்பி சென்ட்ராயன்.. ஒரு கட்டத்தில் இரவில் வந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்.இதனால் அவர்களை கட்டி வைத்து அவமானப்படுத்துகிறார் யோகி பாபு.. !

இதனால் இருவருக்கும் பிரச்சனை வெடிக்கிறது..அதனால் பல சூழலில் உயர் இனத்தை சேர்ந்த சென்றாயனால் அவமானப்படுத்தபடுகிறார். அப்போதெல்லாம் ஊர் பெரியவர் வேல ராமமூர்த்தியால் காப்பாற்ற படுகிறார்.மானமரியாதையோடு வாழ்வதற்கு அவமானங்களை சுமந்துகொண்டு வாழ்க்கையை தள்ளவேண்டியதாய் இருக்கிறது…இந்நிலையில் அப்பா M S பாஸ்கர் வாங்கிய லாட்டரி சீட்டு மூலம் யோகிபாபு கோடீஸ்வரராகிறார். செல்வந்தராக மாறியதும் அவருக்கும் அவரது இனத்தவருக்கும் மரியாதை கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

இவர்களுடன் நல்லசிவம் கேரக்டரில் வேலராமமூர்த்தி, லாட்டரி சீட்டு விற்பவராக இளவரசு, அரசியல்வாதிகளாக படவா கோபி & மாரிமுத்து, எம்எல்ஏவின் தம்பியாக சென்ட்ராயன் உள்ளிட்டோரும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்..

சிறிதும் நகைச்சுவையே இல்லாமல் ஒரு சமூகத்தின் அவமானங்களை தாங்கிக்கொள்ளும் உணர்வுபூர்வமான நடிப்பை கனகச்சிதமாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார் யோகிபாபு. ஒரு புதிய பரிணாமம் அடைந்தவராக அடையாளப் படுத்தப்படுகிறார். ஏனைய நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரமாகவே வாழ்திருக்கிறார்கள்.  பிரசன்னாவின் ஒளிப்பதிவு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது. கதைக்கு தகுந்த இசையை கொடுத்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்  சாம்.சி.எஸ்.

நரிக்குறவர் சமூக மக்களின் வாழ்வியலையும், அவர்களுக்கு அடையாள அட்டைகள் (Identity Papers) இல்லாததால் மறுக்கப்படும் அடிப்படை உரிமைகளையும், அதற்காக அவர்கள் நடத்தும் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘சிங்காரம்’.சமூகப் பிரச்சினைகள், அரசியல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என அனைத்தையும் ஒன்றிணைத்துப் படத்தை  தொய்வில்லாமல் இயக்கியுள்ளார் இயக்குனர் 

மேல் சாதிக்காரன் போல இவர்களும் அதிகாரத்திற்கு வந்தால் அவர்களின் வாழ்வில் விடியல் பிறக்கும் என யோகி பாபு கேரக்டர் மூலம் படத்தின் திரைக்கதை அமைத்து ,குறவன் இனத்திற்கு அரசு அங்கீகாரம் இப்போது கிடைத்துள்ளதை சுட்டி காட்டி படத்தை நிறைவு செய்கிறார் இயக்குனர் கதிர்வேலு..!

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 4.2/5