நெருக்கடிக்குள் போய் கொண்டு இருக்கும் வெற்றிமாறனின் விடுதலை!!
சூரி நாயகனாக அறிமுகமாகும் விடுதலை.படம் தொடங்கியதிலிருந்து பலமுறை இடைவெளி விடப்பட்டுக் கொண்டிருக்குது.
கால்ஷீட் பிரச்சனை தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ரைடு உள்ளிட்ட பல காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போய் கொண்டே இருந்தது.
சமீபத்தில் கொடைக்கானலில் சூட்டிங் நடத்துவதற்காக சென்ற டீம் லோகேசன் சரியில்லைன்னு அங்கிருந்து சிறுமலைக்கு புறப்பட்டனர். ஆனால் அங்கும் இதன் இறுதி கட்டப் படபிடிப்பு எடுக்காமல் தற்போது சென்னை திரும்பி விட்டார்கள்.
இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட பட்ஜெட்டை வீட இப்பவே பல மடங்கு பணம் செலவாகி விட்டது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே வெற்றிமாறனின் படங்கள் பல ஆண்டுகள் படமாக்கப்படுவதால் தயாரிப்பாளர்கள் நொந்து போய் உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது விடுதலை படத்திற்கும் இந்த நிலை ஏற்பட்டிருப்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.
அதோடு அவரது படத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருவதாக புலம்பல் ஒலி வருகிறது