ஹைக்கூ திரைவிமர்சனம் ரேட்டிங் 4.1/5

ஹைக்கூ திரைவிமர்சனம்  ரேட்டிங் 4.1/5

ஹைக்கூ

நடிப்பு: ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ்    தயாரிப்பு:விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து

இசை: சித்துகுமார்     ஒளிப்பதிவு : பிரியேஷ் குருசாமி    இயக்கம்: யுவராஜ் சின்னசாமி

பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா (D’ One), அப்துல் ஏ நாசர்

கதை ஓபன் பண்ணா….!

 மனோ  (ஏகன்) அவர் நண்பர்கள் செய்யும் தவறால் அவர்கள் படிக்கும் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு வேரொரு கல்லூரியில் சேர்கிறார்.அந்த கல்லூரியில் அந்த வருடம் முதல் தான் ஆண்கள் அனுமதி… முழுக்க பெண்கள் படிக்கும் கல்லூரியில் ஒரே மாணவனாக சேர்கிறான் மனோ  .

அந்த கல்லூரியில் படித்துவரும் ஶ்ரீதேவி அப்பாலாவுக்கும் (பவளக்கொடி)  ஏகனுக்கும் காதல் ஏற்படுகிறது. கல்லூரி காதல் இளமை துள்ளலுடன் மலர்ந்து வரும் வேளையில்  அவர்களுக்குள் காதல் முறிவு ஏற்படுகிறது..ஒருகட்டத்தில் காதலியின் அப்பா சாதிவெறி பிடித்தவராக இருப்பதால் வேரொருவனுக்கு ஶ்ரீதேவி அப்பாலாவை திருமணம் செய்து வைக்கிறார்.

இதனால் விரக்தியடைந்த ஏகன் கோவையில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வருகிறார் . ஒரு ஆட்டோமொபைல் சாப்ட்வேர் கம்பெனியில் டீம் லீடராக வேலை பார்க்கிறார். அந்த குழுமத்தில் பெமினா  வேலை தேடி வருகிறார் .அவருக்கு பயிற்சி அளிக்கும் ஏகனும் பெமினாவை நட்பு ரீதியாக பழக ஆரம்பிக்கிறார்கள்

இந்த சூழலில் பெமினாவை காதலிக்கும் நபர் அவரிடம் கடுமையாக நடந்து கொள்கிறார் அவர்களுக்குள் காதல் முறிவு ஏற்படுகிறது….அந்த காதல் breakup ஆனதும்  தன்னை ஒரு சுதந்திர பறவையாக உணர்கிறார் பெமினா .. இறுதியில் ஏகனும் பெமினாவும் காதலிக்கிறார்கள். ஏகன் தனது பழைய காதலி ஶ்ரீதேவி அப்பாலாவின் நினைவாகவே தன்னுடன் பழகுகிறான் என்பது பெமினா ஜார்ஜ்ஜுவுக்கு தெரிய வருகிறது. ஏகன் தனது பழைய காதலி ஶ்ரீதேவியின்  உருவமாகவே தன்னை அணுகுகிறான், தன்னை பார்க்கிறான் என்பதை புரிந்துகொண்ட பெமினா ஏகனுடனான காதலை முடித்து கொள்கிறாள். அதன் பிறகு முடிவு என்ன ..? .அவர்கள் ஓன்று சேர்ந்தார்களா ..? என்பதுதான் ஹைகூ படத்தின் மீதிக்கதை.

புதுமுக ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் ஏகன்  கல்லூரி மாணவன் வேடத்திற்கு பொருத்தமாக இருப்பதுடன் அந்த கதாபாத்திரத்திற்கும் பொருந்தியிருக்கிறார்.  ஏகனின் நடிப்பு மெச்சத்தகுந்தது. தனது கதாபாத்திர்த்தை நன்கு உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார்.ஏகன், ஸ்ரீதேவி காதல்  2கே காதலும் 90ஸ் காதலும் பின்னிப் பிணைந்திருப்பது  காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது.பலருக்கும் அந்த கல்லூரி காட்சிகள் நினைவலைகளை உசுப்பி விட்டிருக்கும் ,,

கதையில்   அவர் வேறு ஜாதி,  இவர் வேறு ஜாதி என்பதால் இந்த கதை வேறு திசையில் செல்லுமோ என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது அதில் ஒரு திருப்பத்தை இயக்குனர் வைத்து எதற்காக இவர்களின் காதல் பிரிகிறது என்பதை கிளைமாக்ஸ் நெருக்கத்தில்  ஓபன் செய்யும்போது ,

இன்றைய இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் சுய மரியாதையை விட்டு கொடுக்க மாட்டார்கள் ..பல பிரிவுக்கு இளைஞர்கள் குடித்து விட்டு தன்னை மறந்து பேசும் கடுமையான வார்த்தைகள் தான் கரணம் என்பதையும் ,காதலர்கள் காதலியிடமிருந்து புரிந்து கொள்ள வேண்டிய ரகசியம்.கோடியாக நடித்திருக்கும் ஸ்ரீதேவி அழகிய கவிதை போல காதலனை கையாள்வது அதே நேரத்தில் தன சுய மரியாதையை இழக்கும் சூழலில் காதலனை கை விடுவது என நடிப்பில் ஸ்ரீதேவி ஸ்கோர் செய்கிறார் ..!

  படத்தில் வரும் இரண்டு கதாநாயகிகள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நன்றாக நடித்து அசத்துகிறார்கள். சித்துகுமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பெரிய பலம். பிரயேஷ் குமாரின்  ஒளிப்பதிவு, கல்லூரி காட்சிகளை கண்ணுக்கு குளிர்ச்சியாக கேரளாவில் கோவையில் படம் பிடித்துள்ளார்….

டைரக்டர் சார்  உங்கள்  படம் பார்த்தேன்… எங்கள் கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தேன் ..கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது ..இதுவும்   ஹைக்கூ கவிதைதான்.(நம்புங்க )

ஆம் அழகான காதல் கதையை ஹைக்கூ கவிதையாக திரையில் படைத்திருக்கிறார் இயக்குநர் யுவராஜ்சின்னச்சாமி மற்றும் பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 4.1/5