418 திரைவிமர்சனம்

418  திரைவிமர்சனம்

418

நடிப்பு: சைத்ரா ஜே ஆச்சார், ரமேஷ் இந்திரா, சூரியராஜ் வீரபத்ணி, சரண் லக்க ராஜு, ப்ரீத்தி பகடாலா,  ஸ்ரீ வைஷ்ணவ், ஷஷாங்  பட்டேல்,     தயாரிப்பு நவீன் எர்ணேணி, ரவிசங்கர் எளமஞ்சலி,        இசை : வெங்கி ஜி ஜி             ஒளிப்பதிவு: தினேஷ் திவாகரன்

இயக்கம்: கிர்டன் நடகவுடா        வழங்குபவர் : பிரசாந்த் நீல்             பி ஆர் ஓ : சுரேஷ் சந்திரா (D’One), அப்துல் ஏ நாசர்

 

கதை ஓபன் பண்ணா….!

ஒரே மகனை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சொத்துக்களை விற்று மகனை வேதகிரி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கின்றனர் . வேதகிரி மலையில் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கிறது. அந்த கல்லூரி விடுதியில் 15 வருடங்களாக 418 எண் அறை பூட்டியே இருக்கிறது. அந்த அறைக்கு பக்கத்திலுள்ள ஒரு அறையில் மாணவனாக சூர்யராஜ் வந்து தங்குகிறார்.

418 என்ற எண் கொண்ட அவனது பக்கத்து அறை எந்நேரமும் பூட்டி கிடக்கிறது. அதற்குள் ஆளை கொல்லும் பேய் இருப்பதாக கூறப்படுகிறது  ஆண்கள் ஹாஸ்டலான அதனுள் பெண்கள் வந்தால் அங்கே அமானுஷ்ய பயங்கரம் நிலவுகிறது.. அது ஏன் என்பதை தெரிந்து கொள்வதற்காக துப்பறிய தொடங்குகிறான் மாணவன். அதன் விளைவு படு பயங்கரமாக மாறுகிறது. சக தோழி ஒருவர் 418 அறைக்குள் சென்றே தீருவேன் என சவால் விடுகிறாள். உயிருக்கு உலை வைக்கும் இந்த சவாலின் முடிவு என்ன?

இரவு நேரங்களில் அவருக்கு சில அமானுஷ்யங்கள் நடக்கின்றன. இதனால் மனநலம் பாதிக்கப்படுகிறார். அவரது நண்பர்கள் அக்கல்லூரியின் மனநல மருத்துவரிடம் காட்டுகிறார்கள். அம்மருத்துவர் அந்த 418 வது அறையின் மர்மத்தை விவரிக்கிறார். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீராத ஆசையினால் சைத்தானை வணங்குகிறார் சைத்ரா…… தனக்கு 6 நபர்களை நரபலி கொடுத்தால் உனக்கு குழந்தை பிறக்கும் என்று சைத்தான் கூறுகிறது. அதற்காக தனது கணவரின் உறவுக்கார பெண்கள் மூன்று பேர்களை நரபலி கொடுக்கிறாள் சைத்ரா. நான்காவது நரபலி கொடுக்கும்போது சைத்ரா இறந்து விடுகிறாள். மீதமுள்ள மூன்று நரபலியை சைத்ராவின் ஆவி கொடுக்க முயற்சிப்பதுதான் மீதிக்கதை.

தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் சைத்ரா ஜே ஆச்சார் இப்படத்தில் பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். பிரதான  பாத்திரமென்றால் அவர் தான் படத்தில் பேய்.

சைத்ரா பேயாக மாறுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது  அது என்ன என்பதை இடைவேளைக்கு  பிறகு தான் தெரிய வருகிறது.வெங்கி ஜி ஜி பேயே அதிரும் அளவுக்கு இசை,  தினேஷ் திவாகரனின் மிரட்டும் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பக்க பலம் ..!

இயக்குனர் கிர்டன் நடகவுடா ஏதோ ஒரு பேய் கதை  என்றில்லாமல் கம்சன் புராண கதையை  கதாபாத்திரத்தோடு முடிச்சு போட்டிருப்பது எதிர்பார்க்காத திருப்பம்.

கே ஜி எஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இப்படத்தை வழங்கி இருக்கிறார்.

418  பேய் பட ரசிகர்களுக்கு பேய் விருந்து

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.2/5