ஜாக்கி திரைவிமர்சனம் ரேட்டிங் 3.8/5

ஜாக்கி திரைவிமர்சனம் ரேட்டிங் 3.8/5

ஜாக்கி

நடிப்பு: யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி, மதுசூதனராவ்      தயாரிப்பு: பிரேமா கிருஷ்ணதாஸ்    இசை: சக்தி பாலாஜி    ஒளிப்பதிவு: என் எஸ் உதயகுமார்  இயக்கம்: பிரகபல்     பிஆர்ஓ: நிகில் முருகன்

கதை open பண்ணா ….!

யுவன் கிருஷ்ணா (ராமர்) ஷேர் ஆட்டோ ஓட்டிக்கொண்டு தனது கிடா, காளியை அன்பாக வளர்த்து வருகிறார்.கிடா ,சண்டை யில் ரிதான் கிருஷ்ணாஸ் (கார்த்தி) கிடாயை நாயகன் ராமரின் கிடவான காளி பந்தயத்தில்  யுவண் கிருஷ்ணாவின் கிடா, ரித்தன் கிடாவை முட்டி அதன் கொம்பை முறித்துவிட்டு ஜெயிக்கிறது. இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ளாத ரித்தன்,. இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்கிறார்கள். இவர்களின் பகை ரித்தன், யுவண் கிருஷ்ணாவை கிடாச் சண்டையில் தோற்கடிக்க குறுக்கு வழியில் முயற்சிக்கிறார்…

இதற்கிடையில் அம்மு அபிராமியும், யுவன் கிருஷ்ணாவும் காதலிக்கிறார்கள்.ரிதான் கிருஷ்ணாஸ் நாயகனின் ஆட்டுகிடாவான காளியை ,வென்றே ஆக வேண்டும் அந்த ஜாக்கி பதக்கத்தை மீட்க வேண்டும். என்று கங்கணம் கட்டிக்கொண்டு மீண்டும், ஒத்த பாளையத்தில் நடக்கும் கிடா சண்டைக்கு அழைக்கிறான்…ராமர் மறுத்த போதும் அவனை சீண்டி பந்தயத்திற்கு சம்மதிக்க வைக்கிறான். அந்தப் பந்தயத்தில் ஆட்டுக்கிடாவான காளியின் மண்டை உடைந்து கார்த்தியின் கைவசம் ஆட்டுக்குட்டி காளி செல்கிறது… இவர்களின் பகையை ஒரு முடிவுக்கு கொண்டுவர ஊர் தலையாரி மதுசூதன்ராவ் ஒரு முடிவு எடுக்கிறார்…!

ஷேர் ஆட்டோ ஓட்டிக்கொண்டு கிடா பந்தயத்துக்கு தனது ஆட்டுக்கிடா ,காளி மீது உயிரையே வைத்திருக்கும் கதாபாத்திரத்தில், அற்புதமாக நடித்திருக்கிறார்.
வில்லன் கார்த்தியை மீன் மார்க்கெட், என்று அழைத்து தன் சகோதரியின் மகள்காதுகளை சேதப்படுத்திய கரங்களை வெட்ட துடிக்கும் போதும் ,சூதுவைத்து களத்தில் வென்று விட்டான். என்று கொதிக்கும் பொழுதும். தன்னுடனே இருக்கும் பெரிய சாமியை திட்டி அனுப்பி விட்டு, மீண்டும் காளியை காப்பாற்றி ய போது கட்டி அணைக்கும் பொழுது, நடிப்பில்  உயர்ந்து நிற்கிறார்…

கார்த்தி, என்ற வில்லன் வேடத்தில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார் ரிதான் கிருஷ்ணாஸ்.தன்னுடைய ஆட்டுக்கிடா, பந்தயத்தில் தோற்றுவிட்டது. என்று கொந்தளிக்கும் பொழுதும், நாயகன் ராமரை பழிவாங்க துடிக்கும் பொழுது, வீடு தேடி சென்று ராமரை, தேடி விட்டு அவர் சகோதரியும், சகோதரி மகள் இனியாவையும் மிரட்டி விட்டு வரும் பொழுதும், கிளைமாக்ஸ் காட்சியில் தன் தவறை உணர்ந்து நாயகனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும், ரித்தன் கிருஷ்ணதாஸ் ஒரு சராசரியான வில்லத்தனத்திலும் மிளிர்கிறார். ஆம்பளை இல்லாத வீட்டுக்குள் புகுந்து அட்சகாசம் செய்யும் காட்சியில் பார்வையாளர்களின் கோபத்துக்கே ஆளாகும்படி தனது நடிப்பில் மிளிர்கிறார் வில்கன் ரித்தன் கிருஷ்ணதாஸ். . அம்மு அபிராமியின் காதல் மொழிபேசும் கண்களை ரசிக்க முடிகிறது. அளவான நடிப்பை கொடுத்து படத்தை  தேக்க நிலையிலிருந்து மீட்டெடுக்கிறார். மதுரை மண்ணின் வாசத்தை நுகர்ச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் உதயகுமார். பின்னணி இசை படத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டிலொன்றான கிடாச்சண்டை விளையாட்டை கௌரவப்படுத்தியிருக்கும் இயக்குநர் பிரகபால் மற்றும் ஜாக்கி பட குழுவினருக்கும் பாராட்டுக்கள் ..!

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.8/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *