சல்லியர்கள் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.7/5

சல்லியர்கள் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.7/5

சல்லியர்கள்

நடிப்பு: சேது கருணாஸ், சத்யதேவி , திருமுருகன், ஜானகி, மகேந்திரன், நாகராஜ், பிரியா, ஆனந்த் சவுந்தரராஜன், மோகன், சந்தோஷ்,

தயாரிப்பு: எஸ் கருணாஸ், பி கரிகாளன்  இசை: கென் மற்றும் ஈஸ்வர்  ஒளிப்பதிவு: சிபி சதாசிவம்  இயக்கம்: டி. கிட்டு  பி ஆர் ஓ: A. ஜான்

கதை open பண்ணா ….!

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழர்களின் நாடாக இருந்த இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்,  ஆங்கிலேயர்கள் சிங்களர்களுக்கு இலங்கையை சுதந்திரமாக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். தற்பொது தனது நாட்டை மீட்க போராளிகள் உருவானார்கள்.  சிங்களர்களுக்கு எதிராக ஒரு பகுதியை தமிழர் பிரதேசம் என்று அறிவித்து தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். போரில் காயமடைந்து கிடக்கும் தமிழர் மற்றும் சிங்கள போராளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பதுங்கு குழிகள் அமைத்து சேவை செய்பவர்கள்தான் சல்லியர்கள்.

 

இந்த பதுங்கு குழி மருத்துவமனையை அழிக்க சிங்கள ராணுவம் அதிகாலை நேரத்தில் விமானம் மார்க்கமாக குண்டுகள் வீசுகிறார்கள். இதிலிருந்து சல்லியர்கள் தபித்தார்களா? இல்லையா?. பதுங்கு குழி மருத்துவமனை குண்டு வெடுப்பிலிருந்து தப்பித்ததா? இல்லையா? என்ற ஒரு வரலாற்று சம்பவத்தை திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கிட்டு…!மாறனாக நடித்திருக்கும் நாகராஜ், மலராக நடித்திருக்கும் பிரியலயா காதல் ஜோடி காதலை மட்டுமல்லாமல் அத்துடன் சேர்ந்து வீரத்தையும் காட்டுவது இதுவரை காதல் காட்சிகளில் பார்க்காத புதுமை.

டாக்டர் நந்தினியாக நடித்திருக்கும் சத்யதேவி பெண் போராளியாகவே மாறியிருக்கிறார். இவர் நிஜ டாக்டரா என்று எண்ணும் அளவுக்கு அடிபட்டு வரும் போராளிகளுக்கு அளிக்கும் சிகிச்சையின் போது காட்டும் வேகம்,நேர்த்தி, கத்தி போன்ற பேச்சு இப்படித்தான் ஒரு டாக்டர் இருக்க வேண்டும் என்று கற்றுத் தருகிறார்…!மருத்துவராக நடித்திருக்கும் மகேந்திரன், தோற்றம் நடிப்பு என்று சரியாகப் பொருந்துகிறார். கருணாஸ் சிறப்பாக நடித்துள்ளார். அவர் பேசும் வசனங்கள் அனைத்தும், தமிழ் ஈழ மக்களின் உணர்வுகளாகப் படம் பார்ப்பவர் மனதை பதம் பார்க்கிறது . பதுங்கு குழிகளில் புதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் ஒரு வரலாற்று சம்பவத்தை திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கிட்டு.

இந்த படம் அனைவரும் குறிப்பாக தமிழர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்சல்லியர்கள் பட குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் ..!

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.7/5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *