மார்க் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.9/5

 மார்க்  திரைவிமர்சனம் ரேட்டிங் 3.9/5

 மார்க்

நடிப்பு: கிச்சா சுதீப், யோகி பாபு, விக்ராந்த், நவீன் சந்திரா. குரு சோமசுந்தரம் மற்றும் பலர்  தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்  இசை: அஜனீஸ் லோக்நாத்

ஒளிப்பதிவு: சேகர் சந்திரா  இயக்கம்: விஜய் கார்த்திகேயா   பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா ( D ‘One)

கதை open பண்ணா ….!

கர்நாடகா மங்களூரில் பிரபலமான ரவுடியாக இருக்கும்  நவீன் சந்திராவின் தம்பி விக்ராந்த்   ரவுடி ராஜ்ஜியம் நடத்தும் பத்ரா (நவீன் சந்திரா) யாராவது ஒரு வார்த்தை எதிர்த்து பேசினால் சுட்டு தள்ளுகிறான். இவரது தம்பி ருத்ரா (விக்ராந்த்) ஒரு பெண்ணுடன் ஓடி விடுகிறான். இதையறிந்து கோபம் அடையும் பத்ரா, ருத்ராவை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவனைத் தேடி அலைகிறான். பத்ராவிடமிருந்து தப்பிக்க 18 குழந்தைகளை கடத்தி அதன் மூலம் பணம் பெற்று காதலியுடன் வெளிநாடு தப்பிக்க முடிவு செய்கிறான் ருத்ரா. ..18 சிறுவர்களை கடத்தி ஆற்றங்கரையோரமுள்ள ஒரு இடத்தில் அடைத்து வைக்கிறார். அடைத்து வைத்த 18 மணி நேரத்துக்குள் சிறுவர்கள மீட்காவிட்டால் 18 குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்து விடும்படியான ஒரு அமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, விக்ராந்தின் அண்ணன் நவீன் சந்திராவின் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை  காவல்த்துறை ஆய்வாளர் மடக்கிப்பிடித்து மங்களூர் காவல் நிலையத்தில் வைத்திருக்கிறார். .. மறுபுரத்தில், மருத்துவமனையில் கர்நாடக முதலமைச்சர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். முதலமைச்சரின் மகன் ஷைன் டாம் சாக்கோ, தானே முதலமைச்சராக ஆகவேண்டுமென்ற ஆசையில் விஷ ஊசிபோட்டு முதலமைச்சரான தன் தாயையே கொலை செய்கிறார். அந்தக் கொலை காட்சியை ஒரு மருத்துவர் தனது கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துவிட்டு தப்பித்து விடுகிறார். இந்த மூன்று நிகழ்வுகளையும் ஒரே புள்ளியில் இணைக்கிறார் இயக்குநர் விஜய் கார்த்திகேயா. நவீன் சந்திரா, விக்ராந்த், ஷைன் டாம் சாக்கோ ஆகிய இந்த மூன்று வில்லன்களையும் கிச்சா சுதீப் எப்படி எதிர்கொண்டார்? அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறுவர்கள் மீட்கப்பட்டார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

சண்டை காட்சிகளில் தனித்து போராடும் சிங்கமாக கிச்சா சுதீப் …எதிரிகளை பந்தாடும் காட்சிகள் ரசிகர்களை கைத்தட்ட வைக்கிறது. சண்டைக் காட்சிக்கு முத்தாப்பு வைத்த காட்சி,  கோயில் திருவிழாவில் பாட்டுப்பாடி நடனமாடியபடி கிச்சா சுதீப் சண்டையிடுவது awesome..

விக்ராந்த் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். வில்லன் வாய்ப்பை தயங்காமல் தொடர்ந்து ஏற்றால் நல்லதொரு இடத்தை பிடிக்க வாய்ப்பிருக்கிறது.பத்ரவாக நடித்திருக்கும் நவீன் சந்திரா ஓவர் கூச்சல் போட்டாலும் கிளைமாக்ஸ்சில் கிச்சா சுதீப்புடன் பரபரப்பாக மோதி இருக்கிறார்…குரு சோமசுந்தரம் காமெடி வில்லனாக நடிக்க யோகி பாபு கிச்சு கிச்சு மூட்டுகிறார்..

இயக்குநர் விஜய் கார்த்திகேயா.ஒரு அதிரடி ஆக்சன் படத்தை கிச்சா சுதீப்பின் ஸ்டைல் அதிரடி கலந்து கொடுத்து மாபெரும் வெற்றியை தக்க வைத்துள்ளார் ..

மொத்தத்தில்  மார்க்கிச்சா சுதீப்பின் அமர்க்களம் ..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *