டியர் ரதி திரைவிமர்சனம் ரேட்டிங் 2.7/5

டியர் ரதி திரைவிமர்சனம் ரேட்டிங் 2.7/5

டியர் ரதி

நடிப்பு: சரவணா விக்ரம், அஸ்லி அமான், பாலச்சந்திரன், சாய் தினேஷ், பத்ரம் யுவராஜ், சுப்ரமணியன்,  தயாரிப்பு: மோகனா மஞ்சுளா எஸ்

இசை : எம் எஸ் ஜோனஸ் ரூபர்ட்  ஒளிப்பதிவு: லோகேஷ் இளங்கோவன்  இயக்கம்: பிரவீன் கே மணி   பிஆர்ஓ: சக்தி சரவணன்

கதை open பண்ணா ….!

தகவல் தொழில் நுட்பத்துறையில்  மென்பொறியாளராக வேலை பார்க்கும் சரவணா விக்ரம்(மதன்) பெண்களிடம் பேசுவதற்கு வெட்கமாகவும் தயக்கமாகவும் இருப்பதாக உணர்கிறார். அதை போக்குவதற்காக மதனை பலான வீட்டிற்கு அவரது நண்பர் அழைத்து செல்கிறான். அங்கிருக்கும் ரதியிடம் (அஸ்லி அமான்) மனதை பறிகொடுக்கும் மதன் அவருடன் ஒரு நாள் ஜோடியாக ஊரைச்  சுற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பணம் கொடுத்தால் வருகிறேன் என்று ரதி கூற, அதற்கு சம்மதிப்பதால்  அவனுடன் செல்கிறாள்..அதே நாளில் அந்தப் பெண்ணைத் தேடி போலீஸ் ஒரு பக்கம், ரவுடிக் கும்பல் ஒரு பக்கம் எனத் துரத்துகிறார்கள்….வெளியே சென்றவர்கள் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள்…ஒரு நாள் முழுக்க வெளியில்  ஒப்பந்தபடி அவருடன் ஊர் சுற்ற தொடங்கியதும் அவர்கள் பின்னாலேயே கதையும் நகரத் தொடங்கி விடுகிறது. இவர்கள் ஒரு பக்கம் சுற்ற இவர்களைத் தேடி ரவுடி கூட்டம் இன்னொரு பக்கம் அலைவது…அது என்ன மாதிரியான பிரச்சினை ?அதை எப்படி எதிர்கொண்டார்கள்? என்பதுதான் ‘டியர் ரதி’ படத்தின் கதை ‘ரொமான்டிக் காமெடி’யாக இந்த ‘டியர் ரதி’ திரைப்படம் உருவாகி இருக்கிறது.

நடிகர் சரவணா விக்ரம் முதலில் கதாபாத்திரத்திற்கு பொருந்தாதது போல் தோன்றினாலும்… தன்னுடைய பக்குவப்பட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை எளிதாக கவர்ந்து விடுகிறார். பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை ஹஸ்லி அமான் – வசனம் பேசும் இடங்களை விட பேசாமல் மௌனமாக இருக்கும் பல தருணங்களில் தன் நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி ரசிகர்களை வசப்படுத்துகிறார்.

பாலியல் தொழிலாளி ஒருவருக்கும் கன்னி கழியாத இளைஞன் ஒருவருக்கும் இடையேயான ஒரு நாள் பழக்கம்தான் படத்தின் மைய கதை என்றாலும்.. இதன் பின்னணியில் இயக்குநர் உருவாக்கி இருக்கும் இருண்ட உலகம்-  இருண்ட மனிதர்கள்- ரசிகர்களை கவரவே செய்கிறார்கள்..!புதுமுகங்களையும் அனுபவ சாலிகளையும் இணைத்துப் படக் குழு, அமைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பிரவீன். கே .மணி.இவர் இறுதிப் பக்கம் என்ற படத்தில் உதவி இயக்குனராக இருந்து இப்படம் மூலம் இயக்குனராக உயர்ந்திருக்கிறார்.படம் கதையை சொன்ன விதத்திலும் சீராக கொண்டு சென்ற விதத்திலும் ஒரு பாலியல் தொழிலாளியின் வேதனை வழிகளை சொன்ன விதத்திலும்  இயக்குனர் வெற்றி பெற்று இருக்கிறார்.

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 2.7/5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *