ரெட்ட தல திரைவிமர்சனம் ரேட்டிங் 3.4/5
ரெட்ட தல
நடிப்பு: அருண் விஜய் (இரு வேடம்), சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ்
தயாரிப்பு: பாபிபாலச்சந்திரன் இசை: சாம் சி எஸ் ஒளிப்பதிவு: டிஜோ தாமி இயக்கம்: கிருஷ் திருக்குமரன் பிஆர்ஓ: சதீஷ் (Team AIM)

கதை ஓபன் பண்ணா…!
இப்படத்தில் அருண் விஜய் இருவேடங்களில் நடித்திருக்கிறர். பாண்டிச்சேரியில் ஏழை குடிமகனாக காளி என்ற கதாபாத்திரத்திலும் கோவாவில் கோடீஸ்வரன் உபேந்திரா என்ற கதாபாத்திரத்திலும் அருண் விஜய் நடித்திருக்கிறார். சரி இனி இவர்களின் கதைக்கு வருவோம்…சிறுவயதில் அனாதையாக திரியும் காளிக்கு (அருண் விஜய்) தோழியாகும் சிறுமி (சித்தி இத்னானி) வளர்ந்த பிறகும் தோழியாகவே இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள காளி விருப்பம் தெரிவிக்கும்போது “உன்னிடமும் பணம் இல்லை, என்னிடமும் பணம் இல்லை. நாம் திருமணம் செய்து என்ன பயன். நான் வெளிநாடு சென்று செட்டிலாகிறேன்” என்று பதில் சொல்கிறார்.காதல் தோல்வியில் குளித்துவிட்டு ரோட்டில் நிற்கும் அருண் விஜயை காரில் வரும் நபர் இடித்து விடுகிறார் சட்டென்று கார் இந்த இடத்தில் நிற்கிறது கோடீஸ்வரரான விஜய் அருண் விஜய் வழியில் நின்றுகொண்டிருக்கும் ஏழை குடிமகனான அருண் விஜயை பார்த்து தன்னைப்போலவே இருக்கின்றானே என ஆச்சிரியப்பட்டு தனது காரில் ஏற்றிக்கொள்கிறார்.பாண்டிச்சேரியில் உள்ள அவருடைய கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறார்கள் . இருவரும் நண்பர்களாக ஆகுகிறார்கள். பணக்கார வாழ்க்கையை வாழ்ந்துபார் என்று ஏழை அருண் விஜய்யிடம் சொல்கிறார் பணக்கார அருண் விஜய். அந்த பணக்கார வாழ்க்கையின் சுகத்தை அனுபவித்த ஏழை அருண் விஜய்க்கு நிரந்தரமான பணக்காரனாக வாழ ஆசைப்படுகிறார். அதற்கு பணத்தாசை பிடித்த அவரின் காதலி சித்தி இதானியின் யோசனையால், தன்னைப்போலவே இருக்கும் பணக்கார அருண் விஜயை கொலை செய்துவிட்டு பணக்காரனாக மாறுகிறார் ஏழை அருண் விஜய். ஆனால் கோவாவில் இருந்து பாண்டிச்சேரிக்கு வந்த கோட்டீஸ்வர அருண் விஜய், ஏழை அருண் விஜயை கோவாவுக்கு அழைத்த்ச் சென்று அவரை கொலைசெயத்தான் பாண்டிச்சேரிக்கே வந்தார் என்பது பிறகுதான் அவருக்கே தெரியவருகிறது. அது ஏன் என்பதுதான் கதை.

இப்படத்தில் .அருண் விஜய்க்கு ரொம்பவும் ஸ்டைலிஷான படமாக இது அமைந்திருக்கிறது. அவர் நடித்த முந்தைய படங்களிலிருந்து முற்றுலும் மாறுபட்ட வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரத்தை உணர்ந்து நிறைவாக நடித்துள்ளார் விறுவிறுப்பான படத்தொகுப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. கதைக்கேற்ற இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.CSபாபி பாலச்சந்திரன் படத்தை தயாரித்திருக்கிறார்.கேமராமேன் டிஜோ தாமி கலர் டோனில வித்தியாசத்தை காட்டி காட்சிகளை ஹாலிவுட் ஸ்டைலில் படமாக்கி இருக்கிறார்மேலும் தான்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்….

இயக்குனர் கிருஷ் திருக்குமரன் விறுவிறுப்பான ஆக்சன் கதையை அருண் விஜய்க்காக செதுக்கி கொடுத்துள்ளார் .. அருண் விஜயும் ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டி மிரட்டி உள்ளார்….பார்க்கும் ரசிகர்களுக்கு திரைக்கதையில் உள்ள திருப்பங்களை அது ரசிகர்களை குழப்பத்தில் அழுத்தாமல் தவிர்த்து இருந்தால் படம் மாபெரும் வெற்றியை அடைந்திருக்கும் …! ரெட்டை தல இயக்குனர் மற்றும் பட குழுவினருக்கு பாராட்டுக்கள்…!
நம்ம tamilprimenews.comரேட்டிங் 3.4/5

