சிறை திரைவிமர்சனம் ரேட்டிங் 4.1/5
சிறை
நடிப்பு: விக்ரம் பிரபு, அறிமுகம் எல் கே அக்ஷய் குமார், அனந்தா அனிஷ்மா மற்றும் பலர் தயாரிப்பு: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) SS லலித் குமார்
இசை: ஜஸ்டின் பிரபாகரன் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம் இயக்கம்: சுரேஷ் ராஜகுமாரி பி ஆர் ஓ: யுவராஜ்

கதை ஓபன் பண்ணா…!
விசாரணை கைதி ரவுடி ஒருவனை அழைத்து கொண்டு நீதிமன்றம் செல்ல பஸ்ஸில் விக்ரம் பிரபு அவர் உதவியாக காவலர் இருவர் வந்து கொண்டு இருக்கும் போது அந்த ரவுடியை போகும் வழியில் காப்பாற்றி அழைத்து செல்ல ஒரு கும்பல் மிளகாய் தூள் கலந்த தண்ணீர் பந்துகளை வீச , ரவுடி தப்பிக்காமல் இருக்க தன்னிடம் இருந் துப்பாக்கி கொண்டு சுட்ட வீழ்த்துகிறார் விக்ரம் பிரபு ..சட்டென அதிர்கிறது அந்த களம் மட்டுமல்ல திரைஅரங்கமும் தான்..காவல் துறை நீதிமன்றம் நடைமுறைகள் அதனால் RTO விசாரணைக்கு ஆள்படுகிறார் …ஏட்டைய்யாவாக இருந்தாலும் தன கடமையை செய்ததாக வாதாடுகிறார் விக்ரம் பிரபு ..
அதன் பின் ஒரு நாள் வேலூர் சிறை கைதி ஒருவனை சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல பணிக்கப்பட்ட காவலர் தன் வீட்டில் தாயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த பணிக்கு வேற ஒருத்தரை நியமிக்க கேட்டுக் கொள்ள ,விக்ரம் பிரபு அந்த பணியை ஏற்றுக் கொள்கிறார் விக்ரம் பிரபு தன்னுடன் வரும் இரு காவலர்களும் வேலூரில் சிறைக்கு சென்று அப்துல்லா என்ற கைதியை அழைத்துக்கொண்டு பஸ்ஸில் சிவகங்கை நோக்கி புறப்படுகிறார்கள் போகும் வழியில் விக்ரம் பிரபு உடன் வரும் காவலர்கள் இருவரும் செய்யும் சிறு தவறினால் தாங்கள் வந்த பஸ்ஸையும் கைதியையும் தவற விடுகிறார்கள் தப்பித்த கைதி அப்துல்லா யார் அவன் பின்னணி என்ன மூவரும் அடுத்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்….! அந்த இடத்தில் படத்தின் திரைக்கதை படபடக்கிறது வேறொரு பஸ்ஸில் விரட்டிச் சென்று அந்த பஸ்ஸை மடக்கி தேடிய போது அங்கு கைதியும் இல்லை துப்பாக்கியும் இல்லை… தப்பித்த கைதி அப்துல்லா யார் அவன் பின்னணி என்ன…? அப்துல்லா யார் கிராமத்தில் அவன் வாழ்ந்த வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை விக்ரம் பிரபு அவனிடம் விசாரிக்க கதைக்களம் விரிவடைகிறது ..!

நாயகி கலையரசி அப்துல்லாவை காதலிக்கிறார் இவர்கள் காதலுக்கு இடையே நடக்கும் பிரச்சினை காரணமாக தற்செயலாக ஒரு கொலை நடந்து விடுகிறது ..அது அப்துல்லாவின் வாழ்க்கையை புரட்டி போடுகிறது…. கலையரசி ஐந்து வருடமாக அப்துல்லாவை பார்க்க ஒவ்வொரு வாய்தா விற்கும் நீதிமன்றம் வந்து பார்த்து செல்கிறார் ….இந்த முறையும் விக்ரம் பிரபு உடன் தன் கதையை சொன்ன அப்துல்லா கலையரசி கண்டிப்பாக வருவார் என்னை கை விலங்கு இல்லாமல் அழைத்துச் செல்லுங்கள் என்று கெஞ்சி கேட்டுக்கொள்கிறார்..கைதி அப்துல்லா காதல் கதையைக் கேட்கும் விக்ரம் பிரபு அந்த காதலை சேர்த்து வைக்கும் முடிவை மனதில் நிறுத்திக் கொண்டு கைதியின் காதலி வந்தவுடன் அவர்கள் இருவரையும் மனம் விட்டு பேச வைத்து இந்த காதல் ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மனதுக்குள் விதைத்து வைக்கிறார் விக்ரம் பிரபு……இறுதியில் அப்துல்லாவும் கலையரசியும் ஓன்று சேர்ந்தார்களா …?என்ன நடந்தது என்பதை ட்விஸ்ட் வைத்து கிளைமாக்ஸ் எடுத்துள்ளார் இயக்குனர்…!

ஜஸ்டின் பிரபாகரன் இசை, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு . செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) SS லலித் குமார் படத்தை தயாரித்திருக்கிறார்.அப்துல்லாவாக நடித்த அக்ஷய் குமார் நடிப்பு அருமை தயாரிப்பாளர் லலித்குமாரின் மகன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
விக்ரம் பிரபு படம் தொடங்கும் போது காட்டிய ஆக்ரோஷத்தை படத்தில் திரைக்கதைக்கு ஏற்ப குறைத்துக் கொண்டு தன்னுடைய புத்திசாலித்தனத்தாலும் காவலர்களுக்கு இருக்கும் அதிக அதிகாரத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை சொல்லப்பட்ட விதத்திலும் ….அதில் விக்ரம் பிரபு உண்மையான நடிப்பை கதைக்கு தேவையான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்... இந்த படம் சிறை விக்ரம் பிரபு நடித்த படங்களில் இது ஒரு மைல் கல் என்றே சொல்லலாம் ..கலையரசி, என்ற கதாபாத்திரத்தை முகபாவனை மூலம் சொல்லி இருக்கிறார். காதலனுக்காக, ஏங்கும் கதாபாத்திரம். அக்கா கணவனிடம் மல்லுக்கட்டும் கதாபாத்திரம்.நல்ல நடிப்பு… கலையரசி, தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு அழகான வரவு ..!
மொத்தத்தில் நம் மனதில் நீங்கா இடம் இந்த சிறை
நம்ம tamilprimenews.com ரேட்டிங் 4.1/5

