நிர்வாகம் பொறுப்பல்ல திரை விமர்சனம் ரேட்டிங் 3.8/5
நிர்வாகம் பொறுப்பல்ல
நடிப்பு: எஸ் கார்த்தீஸ்வரன், ஸ்ரீநிதி, ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் தயாரிப்பு: டி ராதாகிருஷ்ணன்
இசை: ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு: என் எஸ் ராஜேஷ் இயக்கம்: எஸ் கார்த்தீஸ்வரன் பிஆர்ஓ: நிகில் முருகன்

கதை ஓபன் பண்ணா….!
வாழ்க்கையில் வங்கியால் 25ரூபாய் ஏமாற்றப்படும் இளைஞன் அதே பாணியில் சமூகத்தையும் பொதுமக்களையும் ஏமாற்றுவது தான் சுவாரசியமான கதை …!
பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்காக அந்த பணத்திற்காக ஊரையே ஏமாற்றும் கே .எப்படி மக்களை ஏமாற்றினார் ,என்று சொல்வதாக படம் ஆரம்பிக்கிறது…பத்திரிகைகளில் படித்து கடந்துபோன செய்திகளை கதைக்களம் ஆக்கி அதுவே ஒரு அசத்தல் திரைக்கதை, அமைத்து ஏமாற தயாராக இருக்கும் மக்களை ஏமாற்றுவது எப்படி என்று (படம் ) பாடம் எடுத்திருக்கிறார் ”நிர்வாகம்பொறுப்பல்ல” இயக்குனர்…!
.பல வழிகளில், பலர் ஏமாற்றப்பட்டு வருவது தொடர்பாக செய்திகள் வெளியானாலும், மக்கள் ஏமாறுவதும், அவர்களை தொடர்ந்து ஏமாறுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன ? என்பதை காரண காரியங்களோடு கமர்ஷியலாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் எஸ்.கார்த்தீஸ்வரன், இத்தகைய மோசடிகளில் சிக்காமல் இருக்க மக்கள் என்ன செய்ய வேண்டும், என்பதையும் சொல்லியிருப்பது சிறப்பு.எம்.எல்.எம். முறையில் மோசடி, செய்து ஐ.எம்.எஸ் என்ற மோசடி நிர்வாகம் மூலம்4 500″கோடிக்கு ஆட்டை போடுகிறார் நாயகன் கே. மீண்டும் “250 ரூபாய்க்கு” ஒரு மொபைல் போன் கொடுக்கிறேன் என்று மீண்டும் ஒரு 5000″ கோடி ஆட்டையை போடுகிறார். மொத்தத்தில் 9 ஆயிரத்து 500 கோடி பத்தாயிரத்துக்கு இன்னும் 500 கோடி தேவைப்படுகிறது.இப்படிமக்களை ஏமற்றுவது குறித்து சிறிதும் குற்ற உணர்வற்ற கே.என்னும் இளைஞன், தன் புத்திசாலித்தனத்தாலும் பேச்சுத் திறமையினாலும் பெரும் மோசடிப் பேர்வழியாக வலம்வருகிறான். சட்ட அமைப்பை பணத்தைக் கொடுத்துச் சரிக்கட்டுகிறான்.

படத்தில் ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம் இது ஸ்பாய்லர் கிடையாது கே அண்ட் கோ தங்களுக்கு வேண்டிய 500 கோடிக்காக கோடீஸ்வரி மோனிகா என்பவரை காதலிப்பது போல் நடிக்கிறார் மோனிகாவின் கஷ்டமான சூழ்நிலை உணர்ந்து 50 கோடி கொடுத்து உதவுகிறார் மோனிகா கே பின்னியவளையில் வலையில் விழுகிறார்.. மணாலியில் சந்திக்கும் இவர்கள் கேயின் அவசர தேவைக்காக 500 கோடி ஒயிட் மணி டிடி எடுத்து மோனிகா கொடுக்கிறார் அடுத்த நாளே கே அண்ட் கோ எஸ்கேப் ….! இந்த சம்பவத்தின் சுவாரசியமே பின்னப்படும் வலை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர்…!
இந்த மோனிகாவின் தோழி தான் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதி தன் பணம் மோசடி செய்யப்பட்டதை அவன் யார் என்பதையும் ஸ்ரீநிதியிடம் மாணிக்க சொல்ல மோனிகா சொல்ல அதுவரை பிடிபடாமல் இருந்த கே ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார் அதன் பின்பு என்ன நடந்தது கேக்கு தண்டனை கிடைத்ததா என்பதெல்லாம் எதிர்பாராத சுவாரஸ்யம் கலந்த கிளைமாக்ஸ்…!
படத்தை இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அப்பாவி முகம், சாதுவான தோற்றம் என்று சாதாரணமாக வலம் வரும் கார்த்தீஸ்வரன் செய்யும் மோசடிகள் அனைத்தும் அடப்பாவி ரகம். கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன், பலவித கெட்டப்புகளில் தோன்றி ஆச்சரியப் படுத்துகிறார். நடிப்பு, நடனம், காமெடி, ஆக்ஷன் என அனைத்திலும் அசத்தி விட்டார் ..!

லிவிங்ஸ்டன் ,கோழி பண்ணை அதிபராக வந்து ஆவுடையப்பனாக, பேராசையால் ஏமாந்து , இரண்டு பெண் குழந்தைகளை கரையேற்ற முடியாமல் தற்கொலை செய்யும் முடிவு பரிதாபம் .பிளாக் பாண்டி,கதாபாத்திரம் இன்றைய இளைஞர்கள் செல்போனில் ஆபாச படத்தை பார்த்து சாட்டிங் செய்து பணத்தை இழக்கும் அவலம் .ஸ்ரீ நிதி, இன்ஸ்பெக்டர் அன்பரசி வேடத்தில் அம்சமாக பொருந்தி போகிறார் இவர் வரும் காட்சிகளில் அவ்வளவு விறுவிறுப்பு கெத்தான ஒரு காவல் துறை அதிகாரியை பார்த்தது போலஇருந்தது. கிடைத்த கொஞ்சூண்டு இடத்திலும் அழுத்தமாக நடித்திருக்கிறார் அன்புக்கரசி,பெரிய விழிகள், கெத்தான பார்வை, போலீஸ் அதிகாரிக்கு உண்டான திமிரென நல்ல நடிப்பு .மொத்த படத்தையும் அவர் உள்வாங்கிக் கொள்கிறார்.
இயக்குநர் எஸ்.கார்த்தீஸ்வரன், இத்தகைய மோசடிகளில் சிக்காமல் இருக்க மக்கள் என்ன செய்ய வேண்டும், என்பதையும் சொல்லியிருப்பது சிறப்பு…!
வாங்க நல்ல ஒரு விழிப்புணர்வு உள்ள படம் சதுரங்க வேட்டை போல விறுவிறுப்பா படத்த நகர்த்திருக்காங்க அத்தனை பேரும் பார்க்க வேண்டிய படம் நிர்வாகம் பொறுப்பல்ல படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இனியும் வருவாங்க ஏமாற்ற….. நீங்களும் ஏமாற தயாராக இருப்பீர்கள் …..அட்லீஸ்ட் இந்த படத்தை பார்த்தாவது கொஞ்சம் உஷாரா இருங்க …..இல்ல நாங்க ஏமாறத்தான் செய்வோம் அப்படின்னு சொன்னா “நிர்வாகம் பொறுப்பல்ல”…
நம்ம தமிழ் பிரைம் நியூஸ் டாட் காம் ரேட்டிங் 3.8/5

