மிடில் கிளாஸ் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.8/5

மிடில் கிளாஸ் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.8/5

மிடில் கிளாஸ்

நடிப்பு: முனிஷ் காந்த், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதாரவி, மாளவிகா   தயாரிப்பு: தேவ், கே. வி.துரை   இசை: பிரணவ் முனிராஜ்   ஒளிப்பதிவு: சுதர்சன் சீனிவாசன்

இயக்கம்: கிஷோர் முத்துராஜ்   பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா (D’ One), அப்துல் நாசர்

கதை ஓபன் பண்ணா …!

நம் கதையின் நாயகனுக்கோ கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதில் வீடு கட்டிக்கொண்டு நிம்மதியாக வாழ ஆசை. ஆனால் மனைவி விஜயலட்சுமிக்கோ நகரத்திலேயே வசதியாக வாழவேண்டும் என் பது லட்சியம். இதனாலேயே இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள். விஜயலட்சுமியோ ஒவ்வொரு பணத்தேவையின் போதும் கணவனை கரித்துக் கொட்டும் டைப். இருப்பினும் குடும்பம் சிதறி விடக் கூடாது என்பதற்காக அவமானங்களை தனக்குள்ளாக புதைத்துக் கொண்டு வாழ்கிறான் நாயகன்., முனீஸ்காந்த் அப்பா சிவபுண்ணியம் சென்னையில் அந்த காலத்தில் வைத்திருந்த கடையை  ராம் லால் சேட்டிடம் கொடுக்க அவரோ கடன் அடமான பத்திரம் எழுதிக் கொடுக்கிறார்….ஒரு நாள் வீட்டில்  உள்ள குப்பைகளை ஒதுங்க வைக்கும் போது அங்கு இருந்த அப்பாவின் பெட்டிக்குள் இந்த ராம்லால் சேட்டு எழுதி கொடுத்த பத்திரம் கிடைக்கிறது அவரைத் தேடி முனீஸ் கால் செய்கிறார் நேர்மையான அந்த ராம்நல் சேட் முனீஸ்காரனுக்கு அந்த பத்திரத்தை வாங்கி விட்டு ஒரு கோடி ரூபாய்க்கு செக்கு ஒன்றை கொடுக்கிறார் செக்கு வாங்கிய, முனீஸ்காந்த்  வரும் வழியில் அந்த செக்கை தொலைத்து விடுகிறார் அன்றைய பொழுது அவர் வந்த வழியெல்லாம் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை …!

மனைவிக்கு பயந்து எப்படியாவது அந்த செக் கண்டுபிடித்து விட வேண்டும் என்று படபடப்புடன் அலைகிறார்  முனிஸ்காந்த் நண்பர்களாக குரோஷி ஆட்டோ டிரைவராகவும்,   கோடங்கி வடிவேலு வாட்ச்மேன் இருவரும் செக்கை கண்டுபிடித்து கொடுப்பதற்காக உதவுகிறார்கள் ..  மூவரும் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தும் ராதாரவி சந்தித்து உதவி கேட்கின்றனர்.. அந்த செக் அவருக்கு கிடைத்ததா அந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை அவர் அடைந்தாரா அதற்காக என்னென்ன அவமானங்களை சந்தித்தார் என்பதை கண்கலங்க வைக்கும் திரைக்கதையோடு இயக்கியுள்ள இயக்குனர் பாராட்டுக்குரியவர்…! ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தினர் ஆசை நிறைவேறியதா குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம் இந்த மிடில் கிளாஸ் …!

நடுத்தரக் குடும்பத் தலைவர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் முனீஸ்காந்த். மனைவியிடம் அடங்கிப் போகும் இடத்திலும், பிள்ளைகளிடம் அன்பு காட்டும் இடத்திலும் ஒரு நடுத்தர குடும்பத் தலைவரை அப்படியே பிரதிபலிக்கிறார். தன் ஒரு கோடி கனவை கவனக்குறைவால் சிதைத்து விட்டதாக கணவரை வார்த்தைகளால் வாட்டி வதைக்கும் இடத்தில் ஒரு நடுத்தர கணவன் எப்படி இருப்பானோ அச்சு பிசகாமல் அப்படியே இருக்கிறார். அதுவே அந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றி ஆகிவிடுகிறது.நடுத்தரக் குடும்பத் தலைவியாக நடித்திருக்கும் விஜயலட்சுமிக்கு அவரது நடிப்பு வாழ்வில் இது மறக்க முடியாத படமாக இருக்கும். . துப்பறிவாளராக நடித்திருக்கும் ராதாரவி, முனீஸ்காந்த்தின் தந்தையாக நடித்திருக்கும் வேல.ராமமூர்த்தி, ஆட்டோ டிரைவர்  குரோஷி பொருத்தமான பாத்திர வார்ப்பில் கதையோடு பொருந்திக் கொள்கிறார்கள். நாயகனின் கிராமத்து நண்பராக காளி வெங்கட் சில காட்சிகளே என்றாலும் நினைவில் நிற் கிறார்.

பிரணவ் முனிராஜின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை கதைக்களத்தின் தன்மையை நம் உணர்வுக்குள் கொண்டு வந்து விடுகிறது. வேல ராம மூர்த்தி முனீஸ்க்கு  அப்பாவாக சிவ புண்ணியம் என்ற கதாபாத்திரத்தில், ராம்லால்க்கு செய்யும் உதவி தன் மகனுக்கு எப்படி வந்த நல்லதாக முடிகிறது ,என்பதை சிம்பாலிக்காக காட்டி இருப்பது சிறப்பு. மற்றும் முனிஸ்காந்த் நண்பர்களாக குரோஷி ,தாஸ் ஆட்டோ டிரைவராகவும், சங்கு என்ற கதாபாத்திரத்தில் கோடங்கி வடிவேலு வாட்ச்மேன் ஆகவும் வந்து படத்தின் கலகலப்புக்கு உதவுகிறார்கள்.

கிளைமாக்ஸ் காட்சியில் காகம் சொல்லும் கதையை வைத்து கைதட்டல் வாங்கி விடுகிறார். இயக்குனருக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள்.,சுதர்சன் சீனிவாசனின் கேமரா ஆரம்பக் காட்சியிலேயே கிராமத்து வயலில் மகிழ்ச்சி பொங்க படுத்திருக்கும் முனீஸ் காந்த்தை ..படத்தின் அந்த காட்சி ட்ரோன் சாட்டில் எடுக்கப்பட்டு முடிக்கும் போதும் அதே ட்ரோன் சாட்டில் காட்டப்படுவது ஹைலைட்….! எழுதி இயக்கியிருக்கிறார் கிஷோர் முத்துராமலிங்கம்.

ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தினர் ஆசை நிறைவேறியதா குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம் இந்த மிடில் கிளாஸ் …!

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 3.8/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *