மாஸ்க் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.9/5

மாஸ்க் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.9/5

 மாஸ்க்

நடிப்பு: கவின், ஆண்ட்ரியா, ருஹாணி ஷர்மா,  சார்லி,  ரமேஷ் திலக்,  கல்லூரி வினோத்,  அர்ச்சனா சந்தோக்,  ரெடின் கிங்ஸ்லீ,  பவன், ஆடுகளம் நரேன்,  சுப்ரமணியம் சிவா,  ரோகித் டெனிஸ்,  வெங்கட் பேட்டரி,  மகாலட்சுமி  தயாரிப்பு: ஆண்ட்ரியா ஜெரமையா & எஸ் பி. சொக்கலிங்கம்  இசை: ஜிவி பிரகாஷ்  ஒளிப்பதிவு: ஆர்.டி. ராஜசேகர்  ஸ்கிரிப்ட் : வெற்றி மாறன்  இயக்கம்: விகர்ணன் அசோக்  பிஆர்ஓ: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்

கதை ஓபன் பண்ணா…!

நகரின் மையப் பகுதியில் உள்ள பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை நடக்கிறது.அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அள்ளுகிறார்கள்.  சிலர் நடிகர் எம் ஆர் ராதாவின் முகமூடி அணிந்து கொண்டு இந்த கொள்ளையை நடத்துகிறார்கள்….சட்டமன்ற தேர்தல் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுக்க பல நூறு கோடி ரூபாய்களை பல்பொருள் அங்காடிக் கடை நடத்தும் ஆண்ட்ரியா மூலம் பணத்தை பட்டுவாடா செய்ய பணம் அனுப்பபடுகிறது. அந்த பணத்தை ஆண்ட்ரியா தனது கடையில் மறைத்து வைத்திருக்கிறார். இதை தெரிந்து கொண்ட சில முகமூடி மனிதர்கள் அந்தப் பணம் முழுவதையும் கொள்ளையடித்து சென்று விடுகிறார்கள். கொள்ளைபோன அந்த பணத்தை மீட்டுத்தர பணத்துக்காக  தரகு வேலைபார்க்கும் கவினுடன், ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்து கொள்கிறார். கொள்ளையடித்த அந்த முகமூடி மனிதர்கள் யார்? ஒப்பந்தபடி கவின் அந்தப்பணத்தை மீட்டு ஆண்ட்ரியாவிடம் ஒப்படைத்தாரா?. அரசியல்வாதிக்கு அந்த பணம் எங்கிருந்து கிடைத்தது? என்பதுதான் கதை.

சமூக சேவைகள் என்ற பெயரில் சமூக விரோத செயல்களைய செய்யும் ஆண்ட்ரியாவும் வருகிறார். இவர்கள் இருவரும் தீவிரமான தேடுதலில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் அவர்களும் ஒருவரை ஒருவர் உளவு பார்க்கிறார்கள். இவர்களில் பணம் யார் வசம் கிடைத்தது? என்று சொல்வதே ’ மாஸ்க்’ படத்தின் மீதிக்கதை. படத்தின் முதல் காட்சியில் தொடங்கும் பரபரப்பு கடைசி வரை நீடிக்கிறது. இதுவே திரைக்கதைக்கான வெற்றியும் ஆகிவிடுகிறது. சமூக சேவகி என்ற பெயரில் பெண்களை வைத்து அரசியல்வாதிகளி டம் காரியம் சாதிக்கும் கேரக்டரில் ஆண்ட்ரியா வருகிறார். அந்த வில்லி கேரக்டரை புதுசாக செய்து இருக்கிறார்.

டிடெக்டிவ் ஏஜென்ட்டாக கோல்மால் வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கும் கவின் எப்படி இந்த வலையில் சிக்குகிறார்?! என்பதை இயக்குநர் நெல்சன் வாய்ஸ் ஓவரில் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர். இடைவேளை காட்சியில் பணம் கொள்ளையடிக்கப்படும்காட்சியில் ,மற்றும் ஆண்ட்ரியாவிடம் கவின் வசமாக சிக்கிய காட்சி,ஆண்ட்ரியா பவனிடம் எப்படி சிக்கினார் ! என்பதை விறுவிறுப்பாக சஸ்பென்ஸ் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

அரசியல்வாதியாக வரும் பவன், தேர்ந்த அரசியல்வாதியின் முகங்களை மாஸ்க் இல்லாமலே வெளிப்படுத்துகிறார்.படத்தின் திருப்புமுனை கேரக்டரில் வந்து அப்ளாஸ் அள்ளுகிறார் சார்லி. வெங்கட் செங்குட்டுவன், கல்லூரி வினோத், ரமேஷ் திலக், சுப்பிரமணியம் சிவா, அர்ச்சனா, ஜார்ஜ் மரியான், ரெடின் கிங்ஸ்லி உட்பட படத்தில் நிறைய நடிகர்கள்.ஒவ்வொருவரும் கொடுத்த கேரக்டரை நிறைவாக செய்துள்ளார்கள்

ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரின் கேமரா படத்தின் இன்னொரு பலம்.  ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில், பாடல்கள் ரசிக்க வைப்பதுடன் பின்னணி இசை கதையின் நகர்வுக்கு உதவியிருக்கிறது …எழுதி இயக்கியிருக்கிறார் விகர்ணன் அசோக்..நடுத்தர மக்களுக்குக் கோபம் வந்தா நாடு தாங்காது என்கிற கருத்தைச் சொல்ல  நடுத்தர மக்களின் மனநிலையிலிருந்து இயக்குனர் இந்த திரைக்கதையை இயக்கி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் …!

நம்ம tamilprimenews.com  ரேட்டிங் 3.9/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *